Shubman Gill: சாரா டெண்டுல்கருடன் காதலா..? பொதுவெளியில் வெளிப்படையாக பேசிய சுப்மன் கில்

Shubman Gill Sara Tendulkar Dating Rumors: சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, அவர்களது டேட்டிங் கிசுகிசுக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்த கிசுகிசுக்கள் குறித்து சுப்மன் கில் "இருக்கலாம்" என்று மறைமுகமாக பதிலளித்துள்ளார்.

Shubman Gill: சாரா டெண்டுல்கருடன் காதலா..? பொதுவெளியில் வெளிப்படையாக பேசிய சுப்மன் கில்

சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர்

Published: 

13 Jul 2025 17:09 PM

லண்டனில் யுவராஜ் சிங்கின் விருந்தில் கலந்து கொண்டதிலிருந்தே சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் பெயர் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. புற்றுநோய் அறக்கட்டளையான ‘YouWeCan’-க்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்தில் இருந்து இருவரின் சில படங்கள் மற்றும் வீடியோக்களும் வைரலானது. இருப்பினும், சுப்மன் கில் (Shubman Gill) – சாரா டெண்டுல்கர் (Sara Tendulkar) இடையிலான உறவில் உள்ள உண்மை குறித்து உதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆதாரமோ அல்லது அறிக்கையோ வெளியாகவில்லை. இந்தநிலையில், இந்திய அணியின் (Indian Cricket Team) டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் இதுகுறித்து பேசினார். தற்போது, அதுவும் வைரலாகி வருகிறது.

ALSO READ: 10 ஓவரில் 2 முறை பந்து மாற்றம்.. லார்ட்ஸ் டெஸ்டில் எழுந்த சர்ச்சை.. இந்திய வீரர்கள் அதிருப்தி..!

என்ன நடந்தது..?

சில நாட்களுக்கு முன்பு, பஞ்சாபி நடிகை சோனம் பஜ்வா ஒரு நிகழ்ச்சியில் சுப்மன் கில்லை பேட்டி எடுத்தார். அப்போது, சோனம் பஜ்வா, கில்லை சாரா டெண்டுல்கருடன் டேட்டிங் செய்கிறாரா என்று நேரடியாகக் கேள்வி கேட்டார். இது குறித்து, சுப்மன் கில், “இருக்கலாம்” என்றார்.

சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் ஒருவரையொருவர் டேட்டிங் செய்வதாக இதுவரை உறுதியாகவில்லை. இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் சாரா டெண்டுல்கரை விட 2 வயது இளையவர் ஆவார். அதாவது, சுப்மன் கில்லுக்கு 25 வயதுதான் ஆகிறது. அதேநேரத்தில், சாரா டெண்டுல்கருக்கு 27 வயதாககிறது. ஒரு விஷயத்தை சொல்லவேண்டுமென்றால், சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியை விட வயது குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்மன் கில்லின் பெயர் நடிகை அவ்னீத் கவுருடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கு முன்பு, சுப்மன் கில்லின் பெயர் பாலிவுட் நடிகை சாரா அலி கானுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டது.

ALSO READ: கடைசி நேரத்தில் நேரத்தை வீணடித்த க்ரௌலி.. கடுப்பாகி வாக்குவாதம் செய்த சுப்மன் கில்..!

சுப்மன் கில்லை கிண்டல் செய்த சக வீரர்கள்:

முன்னதாக, கில்லின் உயிர் நண்பரான அபிஷேக் சர்மா ஒருமுறை சுப்மன் கில்லிடம் வீடியோ காலில், உங்கள் காதலியின் பெயர் என்ன..? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிப்பதற்கு பதிலாக, சுப்மன் கில் சாக்குப்போக்குகளை சொன்னார். அதாவது, உங்கள் குரல் கட் ஆகிறது என்று தெரிவித்தார். சுப்மன் இதைச் சொன்னவுடன், அபிஷேக் சர்மா பயங்கரமாக கிண்டல் செய்தார்.