Yash Dayal: எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யுங்க.. பாதிக்கப்பட்டவனே நான்தான்.. பெண் மீது புகார் அளித்த யாஷ் தயாள்!
Yash Dayal Harassment Case: ஐபிஎல் வீரர் யாஷ் தயாள் மீது பதிவான பாலியல் துன்புறுத்தல் வழக்கில், அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் எஃப்ஐஆர் ரத்துக்கான மனு தாக்கல் செய்துள்ளார். அத்துடன், அவரைப் புகார் அளித்த பெண் மீது மிரட்டல் குற்றச்சாட்டில் பதிலுக்கு புகார் அளித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (Indian Premier League) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் (Yash Dayal) மீது, ஒரு பெண்ணை பாலியல் மற்றும் மன ரீதியாக துன்புறத்தல் செய்ததாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்றும், காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் பிரிவு 69 இன் கீழ் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த பெண் மீது புகாரளித்த யாஷ் தயாள்:
இதை தொடர்ந்து, யாஷ் தயாள் தனது வழக்கறிஞர் மூலம், அந்த பெண் மீது பிரயாக்ராஜின் குல்தாபாத் காவல் நிலையத்தில் மிரட்டல் குற்றச்சாட்டின் பேரில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண்ணுக்கு எதிராக யாஷ் தயாள் கொடுத்த புகார் மனுவில், “அந்தப் பெண் தன்னை ஒரு பொய்யான வழக்கில் சிக்க வைத்து மனரீதியாகவும், பணம் கேட்டு துன்புறுத்தி வருகிறார். அந்த பெண்ணுடன் சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அவர் எனக்கு ஒரு தோழி மட்டுமே, அந்த பெண் தான் ஆரம்பம் முதலே என்னிடம் திருமணத்திற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கினார்.




ALSO READ: பார்வையற்ற சிறுவனுக்கு பேட் பரிசு.. கட்டிப்பிடித்த ஆரத்தழுவிய ஜெய்ஸ்வால்..!
பண மோசடி:
“Borrowed Lakhs…”: RCB Star Yash Dayal Breaks Silence On Sexual Exploitation Charge Against Him#YashDayal #RCB #CricketNews #IPLNews #GhaziabadCase #LegalRow #CricketControversy @YashDayal15 @RCBTweets pic.twitter.com/lEKuaXA4pv
— Manchh (@Manchh_Official) July 10, 2025
குடும்பத்தில் யாரோ ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று என்னிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணம் வாங்கினார். கடன் கொடுத்த லட்சக்கணக்கான ரூபாயை திருப்பி கேட்டபோது, அந்த பெண் மீது இப்படியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தொடர்ந்து, அந்த பெண் தனது ஐபோன், லேப்டாப் மற்றும் பிற பொருட்களை எடுத்து சென்றுள்ளார். “ என்று தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றம் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறது என்பதையும், இந்த புகார் மனுவின் கீழ் யாஷ் தயாளுக்கு ஏதேனும் பலன் கிடைக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
யார் இந்த யாஷ் தயாள்..?
ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வெல்ல, யாஷ் தயாள் முக்கிய காரணமாக இருந்தார். இந்த சீசனில் யாஷ் தயாள் 15 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 27 வயதான யாஷ் தயாள் முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை 27 போட்டிகளில் விளையாடி 84 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், இவரது சிறந்த பந்துவீச்சு 5/48 ஆகும்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் யாஷ் தயாள் இதுவரை 23 போட்டிகளில் 23.86 சராசரியுடன் 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 71 டி20 போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஐபில்லில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிக்காக இதுவரை 43 போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.