Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rahul Dravid: ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு விலகிய டிராவிட்.. திடீர் முடிவுக்கு என்ன காரணம்..?

Rahul Dravid Exits Rajasthan Royals: ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். 2025 ஐபிஎல் சீசனில் அவரது பயிற்சியின் கீழ் அணி ஏமாற்றமளித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டிராவிட்டுக்கு ஒரு உயர் பதவியை வழங்கியதாகவும், அவர் அதை ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Rahul Dravid: ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு விலகிய டிராவிட்.. திடீர் முடிவுக்கு என்ன காரணம்..?
ராகுல் டிராவிட்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Aug 2025 16:44 PM

ஐபிஎல் தொடரின் வரவிருக்கும் ஐபிஎல் 2026 (IPL 2026) சீசனுக்கு முன்னதாக, ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதை ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியும் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 30ம் தேதி உறுதிப்படுத்தியது. ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, ராஜஸ்தான் அணி ராகுல் டிராவிட்டுக்கு (Rahul Dravid) ஒரு பெரிய பதவி வழங்கப்பட்டதாகவும், ஆனால் அதை டிராவிட் நிராகரித்ததாகவும் அந்த அணி தெரிவித்துள்ளது. இத்துடன், அணியுடனான அவரது பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது.

ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் ராஜஸ்தான் அணியால் ஐபிஎல் 2025 இல் சிறப்பாக செயல்பட முடியவில்லை. லீக் கட்டத்தில் 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து, பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. டிராவிட்டிற்கு அணியில் மிகப் பெரிய பங்கு வழங்கப்பட்டது. ஆனால் ஏதோ காரணத்தால் டிராவிட் அதை ஏற்கவில்லை.

ALSO READ: 3 மாத மௌனத்தை கலைத்த ஆர்சிபி.. உயிரிழந்த ரசிகர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

ராஜஸ்தான் அணியுடனான உறவு:

முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் முன்பு 2011 மற்றும் 2015க்கு இடையில் ராயல்ஸ் அணியில் வீரராகவும், பயிற்சியாளராகவும் இருந்தார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பதவிக்காலம் முடிந்ததும், ராகுல் டிராவிட் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளராக இணைந்தார். இருப்பினும், அவரது வருகை ராஜஸ்தான் அணிக்கு சிறப்பானதாக இல்லை. அதேநேரத்தில், ராகுல் டிராவிட் என்ன காரணத்திற்காக விலகினார் என்பது இதுவரை தெரியவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிக்கை வெளியீடு:


இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “ராகுல் டிராவிட் பல ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயணத்தின் மையத்தில் இருந்து வருகிறார். அவரது தலைமை ஒரு தலைமுறை வீரர்களை பாதித்துள்ளது. ராஜஸ்தான் அணியில் வலுவான மதிப்புகளை விதைத்துள்ளது. உரிமையாளரின் கலாச்சாரத்தில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளது.

ALSO READ: 17 ஆண்டுகளுக்குப் பிறகு! வைரலாகும் ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் சண்டை வீடியோ.. கேள்வி எழுப்பிய ஸ்ரீசாந்தின் மனைவி..!

ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கட்டமைப்பு மறுஆய்வின் ஒரு பகுதியாக ஒரு பெரிய பதவி வழங்கப்பட்டது. ஆனால், அவர் அதை ஏற்கவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ், அதன் வீரர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள், ராகுல் டிராவிட் உரிமைக்கு அவர் செய்த குறிப்பிடத்தக்க சேவைக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.” என்று தெரிவித்தது.

கடந்த 2025 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 24 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. புள்ளிகள் பட்டியலில் அந்த அணி 9வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.