Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தோனி விளையாடுவது ஆச்சரியம்… ஐபிஎல்லில் இருந்து விலகுவதற்கு காரணம்…. – அஸ்வின் பகிர்ந்த தகவல்

Ravichandran Ashwin : தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் அவர் தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

தோனி விளையாடுவது ஆச்சரியம்… ஐபிஎல்லில் இருந்து விலகுவதற்கு காரணம்…. – அஸ்வின் பகிர்ந்த தகவல்
தோனி - ரவிச்சந்திரன் அஸ்வின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Aug 2025 17:26 PM IST

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 ரக போட்டிகளிலும் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். இந்த நிலையில் சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்த அவர், ஐபிஎல் (IPL) போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். கடந்த 2025 ஆண்டு மீண்டும் சிஎஸ்கே அணிக்காக களமிறங்கினார். இந்த 2026 ஆம் ஆண்டும் அவர் சிஎஸ்கேவில் அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருந் நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்து அதிரிச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில் அவரது இந்த திடீர் அறிவிப்புக்கான காரணம் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

வெளிநாட்டு லீக் போட்டிகளுக்காக ஓய்வு

அஸ்வின் தனது யூடியூப் சேனலில் தனது திடீர் ஓய்வு அறிவிப்பு குறித்து பேசியிருக்கிறார். அதில் பிக் பாஷ் லீக், எஸ்ஏ20 போன்ற வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க கிடைத்த வயாப்பு தான், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க காரணம் என குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வரை வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட முடியாது என்பதால் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : ஐபிஎல்லிலும் ஆஹா! ஓஹோ! அஸ்வின் படைத்த சாதனைகள் இவ்வளவா..?

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், அடுத்த வரும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடலாமா என யோசித்தேன். ஆனால் மூன்று மாதங்கள் நடைபெறும் ஐபிஎல் என் உடலுக்கு அதிக சுமையை அளிக்கின்றன. மேலும் இதற்காக அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். போட்டிகளில் பங்கேற்பதற்கு உடலை மீட்டெடுப்பது மிகவும் கடினம்.  என்னால் சமாளிக்க முடியாது என புரிந்தது. அதனால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவது என முடிவெடுத்தேன் என்றார்.

‘தோனி விளையாடுவது ஆச்சரியம்’

மேலும் 44 வயதான சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியின் நீடித்த ஆற்றலைப் பார்த்து வியக்கிறேன். வயது அதிகரிக்க அதிகரிக்க ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கான ஆற்றல் குறைந்து விடுகிறது. ஆனால் தோனி இன்னும் விளையாடுவது ஆச்சரியமாக இருக்கிறது.

இதையும் படிக்க : ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பு!

அஸ்வினின் ஐபிஎல் பயணம்

கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஐபிஎல்லில் முதன்முறையாக சிஎஸ்கே அணிக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு களமிறங்கினார். சில ஆண்டுகள் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அவர், பின்னர் புனே, பஞ்சாப், டெல்லி,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். மேலும் பேட்டிங், பந்துவீச்சு என திறம்பட செயல்பட்டார். பின்னர் கடந்த 2025 ஆம் ஆண்டு சென்னை அணியில் இடம் பிடித்தார். சென்னை அணிக்காக அவர் ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இதுவரை 220 போட்டிகளில் பங்கேற்ற அவர் 187 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். அதிக பட்சமாக 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீசியது சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் பேட்டிங்கை பொறுத்தவரை 883 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 50 ரன்கள் அடித்துள்ளார்.  கடந்த 2010, 2011 ஆம் ஆண்டுகளில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.