AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

PBKSvGT : பஞ்சாப் கிங்க்ஸ் டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு – வெல்லப்போவது யார்?

IPL 2026 : ஐபிஎல் 2026 சீசனில் குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ்  கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது.  இதனையடுத்து குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனை வெற்றியுடன் துவங்கும் முனைப்பில் விளையாடி வருகிறது.

PBKSvGT : பஞ்சாப் கிங்க்ஸ் டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு – வெல்லப்போவது யார்?
ஸ்ரேயாஸ் ஐயர் - சுப்மன் கில்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 31 Mar 2026 19:48 PM IST

குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ்  டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது.   ஐபிஎல் தொடரில் மார்ச் 30, 2026 அன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இது இரு அணிகளுக்கும் இந்த சீசனின் முதல் போட்டியாகும். கடந்த ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இந்த முறை, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியின் இலக்கு கோப்பையை வெல்ல முழு வீச்சில் தயாராகி வருகிறது . மற்றொரு பக்கம் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் நம்பிக்கையுடன் உள்ளது.

இரு அணியிலும் பிளேயிங் லெவன் வீரர்கள்

இந்த போட்டி பஞ்சாபில் உள்ள நியூ சண்டிகரில் நடைபெற்று வருகிறது.  குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.  இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் சுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ககிசோ ரபாடா, அசோக் சர்மா, முகமது சிராஜ் ஆகிோயர் இடம் பெற்றுள்ளனர்.  மேலும் அந்த அணியின் இம்பேக்ட் வீரர்களாக பிரசித் கிருஷ்ணா, ஜேசன் ஹோல்டர், ஜெயந்த் யாதவ், மானவ் சுதர், குமார் குஷாக்ரா ஆகியோர் உள்ளனர்.

இதையும் படிக்க : IPL 2026 Points Table: முதலிடத்தில் ராஜஸ்தான்.. எழ முடியாத நிலையில் சிஎஸ்கே.. ஐபிஎல் 2026 புள்ளிகள் அட்டவணை!

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ்

 

இதையும் படிக்க :  IPL 2026: குஜராத்தை சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் பஞ்சாப்.. இதுவரை யார் ஆதிக்கம்?

மற்றொரு பக்கம் பஞ்சாப் கிங்ஸ் அணியில்  பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கோனாலி, ஷ்ரேயாஸ் ஐயர், நேஹல் வாதா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், விஜய்குமார் வைசாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் அந்த அணியில் இம்பேக் பிளேயர்களாக பிரியன்ஸ் ஆர்யா, பிரவீன் துபே, விஷ்ணு வினோத், ஹர்பிரீத் ப்ரார், சூர்யன்ஷ் ஷெட்ஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இரு அணிகளும் இந்த ஐபிஎல் 2026  சீசனில் வெற்றியுடன் துவங்க போராடி வருகிறது.

 

Follow Us