IND vs SA ODI Series: ரோஹித், கோலி ரீ-என்ட்ரி.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி எப்படி?

Indian Cricket Team: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கழுத்து காயத்தால் அவதிப்பட்டு வரும் சுப்மன் கில் இந்தத் தொடரில் விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஒருவேளை கில் நீக்கப்பட்டால், அனுபவம் வாய்ந்த ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்கலாம்.

IND vs SA ODI Series: ரோஹித், கோலி ரீ-என்ட்ரி.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி எப்படி?

இந்திய கிரிக்கெட் அணி

Published: 

21 Nov 2025 07:23 AM

 IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் (IND vs SA 2nd Test) கொண்ட டெஸ்ட் தொடருக்கு பிறகு, இந்திய அணி உடனடியாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் (Indian Cricket Team) யார் யார் இடம்பெறுவார்கள்? யாருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 நவம்பர் 22ம் தேதி தொடங்கி 2025 நவம்பர் 26ம் தேதி குவஹாத்தியில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து, இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் வருகின்ற 2025  நவம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, இந்தத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: விளையாட விருப்பம்.. அணியுடன் விமானத்தில் பயணித்த கில்! பிசிசிஐ மருத்துவக்குழு கூறுவது என்ன?

ரோஹித், கோலி களம்:

இந்தத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் அணிக்குத் திரும்புவார்கள் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேநேரத்தில், 2025 ஆசிய கோப்பையின்போது காயமடைந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரை இழக்க வாய்ப்புள்ளது. காயத்திலிருந்து மீண்டாலும், ஹர்திக் பாண்ட்யா நேரடியாக சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை.மேலும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் பரோடா அணிக்காக விளையாடுவதன் மூலம் தனது உடற்தகுதியை நிரூபித்துதான் இந்திய அணியில் இடம்பெற முடியும்.

இந்திய அணியின் கேப்டன் யார்..?

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கழுத்து காயத்தால் அவதிப்பட்டு வரும் சுப்மன் கில் இந்தத் தொடரில் விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஒருவேளை கில் நீக்கப்பட்டால், அனுபவம் வாய்ந்த ரோஹித் சர்மா மீண்டும் பொறுப்பேற்கலாம். அப்படி இல்லையென்றால், கே.எல்.ராகுல் அல்லது ரிஷப் பண்ட்க்கு கேப்டன் பதவி வழங்கலாம். துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தால் வெளியேறியுள்ளதால், ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. மேலும், வரவிருக்கும் டி20 தொடரை மனதில் கொண்டு ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்த ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்படும்.

ALSO READ: கில்லுக்கு குணமடையாத காரணம்! SA-க்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணிக்கு புதிய கேப்டன்!

கணிக்கப்பட்ட இந்திய அணி :

ரோஹித் ஷர்மா, விராட் கோலி, சுப்மன் கில்/யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட், அக்சர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே/நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங்.

Related Stories
Asia Cup Rising Stars 2025: அரையிறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டியை எங்கு காணலாம்?
IND vs SA ODI Series: கில்லுக்கு குணமடையாத காரணம்! SA-க்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணிக்கு புதிய கேப்டன்!
Australia vs England 1st Test: கம்மின்ஸ் காயம்.. கேப்டனாக ஸ்மித்.. ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து பிளேயிங் லெவன் எப்படி?
Shubman Gill: விளையாட விருப்பம்.. அணியுடன் விமானத்தில் பயணித்த கில்! பிசிசிஐ மருத்துவக்குழு கூறுவது என்ன?
ICC U19 World Cup 2026: இந்தியா – பாகிஸ்தான் போட்டி இல்லை.. வெளியான அண்டர் 19 உலகக் கோப்பைக்கான அட்டவணை..!
Ind vs SA : 2வது டெஸ்டில் இருந்து வெளியேறும் சுப்மன் கில் – அவருக்கு பதிலாக களமிறங்கப்போவது யார் தெரியுமா?
வாரணாசி பட நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள்.... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ!
ஊழியர்களை கண்காணிக்க புதிய கருவியை பயன்படுத்தும் Cognizant!
ஐபிஎல் ஏலம்.. எப்போது? எங்கு நடைபெறுகிறது? 
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?