Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India – Pakistan: உலகக் கோப்பையிலிருந்து விலகிய பாகிஸ்தான்.. என்ன காரணம்..?

Junior Hockey World Cup 2025: 2025 ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கும். குரூப் B-யில் இந்தியா, பாகிஸ்தான், சிலி மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் இடம் பெற்றிருந்தன. இப்போது பாகிஸ்தான் தனது பெயரைத் திரும்பப் பெற்றுள்ளதால், மற்றொரு அணிக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

India – Pakistan: உலகக் கோப்பையிலிருந்து விலகிய பாகிஸ்தான்.. என்ன காரணம்..?
பாகிஸ்தான் ஹாக்கி அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Oct 2025 22:57 PM IST

கடந்த சில மாதங்களாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் (India – Pakistan) இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா முறித்துக் கொண்டுள்ளது. அதன் தாக்கம் விளையாட்டுத் துறையிலும் தொடர்ந்தது. 2025 ஆசிய கோப்பையில், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் கைகுலுக்க மறுத்துவிட்டது. தொடர்ந்து, பாகிஸ்தானின் மொஹ்சின் நக்வியின் கைகளில் இருந்து கோப்பையை வாங்கவும் இந்திய அணி (Indian Cricket Team) மறுத்தது. மேலும், பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பையிலும் இதே நிலைதான். பாகிஸ்தானின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடத்தப்பட்டன. இதற்கிடையில், 2025 ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி வருகின்ற 2025 நவம்பர் 28 முதல் 2025 டிசம்பர் 10 வரை தமிழ்நாட்டின் சென்னை மற்றும் மதுரையில் நடத்தப்பட இருக்கிறது. ஆனால் இந்தப் போட்டியில் இருந்து பாகிஸ்தான் தனது பெயரை விலக்கிக் கொண்டுள்ளது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பாகிஸ்தான் ஜிந்தாபாத்.. சுப்மன் கில்லை அலறவிட்ட ரசிகர்!

2025 ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை:


2025 ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கும். குரூப் B-யில் இந்தியா, பாகிஸ்தான், சிலி மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் இடம் பெற்றிருந்தன. இப்போது பாகிஸ்தான் தனது பெயரைத் திரும்பப் பெற்றுள்ளதால், மற்றொரு அணிக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். அந்த அணி எது என்பது விரைவில் அறிவிக்கப்படலாம். முன்னதாக நடைபெற்ற ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பிலிருந்தும் பாகிஸ்தான் விலகியிருந்தது. PTI இன் படி, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு இன்று அதாவது 2025 அக்டோபர் 24ம் தேதி பாகிஸ்தான் போட்டியில் இருந்து விலகியதாக அறிவித்தது. FIA இன் செய்திக்குறிப்பின்படி, பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு போட்டியில் பங்கேற்காது என்றும், போட்டிக்கு தகுதி பெற்ற போதிலும் போட்டியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளது.

ALSO READ: இந்திய மகளிர் அணி அரையிறுதியில் யாரை எதிர்கொள்ளும்? அட்டவணை இதோ!

பாகிஸ்தான் அதிகாரிகள் FIH-க்கு அளித்த தகவலின்படி, பாகிஸ்தான் அணி ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் போட்டியில் பங்கேற்க விரும்பினாலும், இந்தியாவில் விளையாடத் தயாராக இல்லை. நடுநிலையான இடத்தில் போட்டியை விளையாடத் தயாராக இருந்தனர். ஆனால் FIH அதை நிராகரித்தது. மறுபுறம், ஹாக்கி இந்தியா இது குறித்து தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளது. PTI அறிக்கையின்படி, ஹாக்கி இந்தியாவின் பொதுச் செயலாளர் போலநாத் சிங், பாகிஸ்தான் போட்டியில் இருந்து விலகுவது குறித்து FIH இன்னும் தங்களுக்குத் தெரிவிக்கவில்லை. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடாது என்பது தெளிவாகத் தெரிந்ததால், ஒரு புதிய அணி சேர்க்கப்படும்” என்று கூறினார். முன்னதாக, ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.