IND vs AUS: அடிலெய்டிலும் இந்திய அணி தோல்வி.. கேப்டனாக தனது முதல் தொடரை இழந்த கில்!
Australia vs India 2nd ODI: சுப்மன் கில்லின் இந்திய அணியின் புதிய ஒருநாள் கேப்டனாக பதவியேற்ற சுப்மன் கில்லுக்கு முதல் தொடர் சிறப்பாகத் தொடங்கவில்லை. கேப்டனாக தனது முதல் தொடரை அவர் இழந்தார். இந்திய பந்து வீச்சாளர்கள் 264 ரன்களைப் பாதுகாக்காமல் வெற்றியை விட்டு கொடுத்தனர்.

அடிலெய்டில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா (IND vs AUS) இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தோற்கடித்தது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா (Indian Cricket Team) 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு, ஆஸ்திரேலிய அணி 22 பந்துகள் மீதமுள்ள நிலையில் 8 விக்கெட்களை இழந்தாலும் போட்டியை வென்றது. கடந்த 17 ஆண்டுகளில் அடிலெய்டில் இந்தியா ஒருநாள் போட்டியில் தோல்வியடைவது இதுவே முதல் முறை.
சுப்மன் கில்லின் இந்திய அணியின் புதிய ஒருநாள் கேப்டனாக பதவியேற்ற சுப்மன் கில்லுக்கு முதல் தொடர் சிறப்பாகத் தொடங்கவில்லை. கேப்டனாக தனது முதல் தொடரை அவர் இழந்தார். இந்திய பந்து வீச்சாளர்கள் 264 ரன்களைப் பாதுகாக்காமல் வெற்றியை விட்டு கொடுத்தனர். இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 73 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 61 ரன்களும் எடுத்து அரை சதங்களை பதிவு செய்தனர். இதுமட்டுமின்றி, அக்சர் படேல் 44 ரன்களும், ஹர்சித் ராணா அதிரடியாக விளையாடி 24 ரன்களும் எடுக்க இந்திய அணி 264 ரன்களை குவித்தது.




265 ரன்கள் இலக்கு:
265 ரன்களை இலக்காக கொண்டு இறங்கினாலும் ஆஸ்திரேலியாவின் தொடக்கம் மோசமாக அமைந்தது. ஆனால் ஷார்ட் மற்றும் கானொலி ஆட்டத்தை மாற்றினர். அதன்படி, கேப்டன் மிட்செல் மார்ஷ் 11 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அனுபவமற்ற நடுத்தர வரிசையைக் கருத்தில் கொண்டு, இந்திய பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை இலக்கை அடைய அனுமதிப்பார்கள் என்பது சாத்தியமில்லாததாக தோன்றியது. இருப்பினும், மூன்றாவது இடத்தில் இருந்த மேட் ஷார்ட், மேட் ரென்ஷாவுடன் (30 பந்துகளில் 30) இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணியை சிக்கலில் இருந்து மீட்டனர்.
இருப்பினும், ரென்ஷா ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, அலெக்ஸ் கேரியும் வெறும் ஒன்பது ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 132 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என்று எண்ணும்போது, கூப்பர் கோனொலி இந்திய அணி நம்பிக்கையைத் தகர்த்தார். ஷார்ட் 78 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 74 ரன்கள் எடுத்தார்.
ஷார்ட் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் நம்பிக்கை திரும்பியபோது மிட்செல் ஓவன் ஒரு எதிர் தாக்குதலைத் தொடங்கினார். ஓவன் 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் எடுக்க, மறுமுனையில் கூப்பர் கோனோலி 53 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டமிழக்காத கூட்டணி , ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை பதிவு செய்ய உதவியது.
ALSO READ: பொறுமையுடன் அரைசதம்.. பதட்டமில்லாமல் பல சாதனை படைத்த ரோஹித் சர்மா!
ரோஹித் மற்றும் ஐயரின் அரை சதங்கள் வீண்:
#TeamIndia with a spirited performance but it’s Australia who win the 2️⃣nd ODI by 2 wickets.
They take an unassailable 2-0 lead in the series
Scorecard ▶ https://t.co/aB0YqSCClq#AUSvIND pic.twitter.com/dNjwbXIsXU
— BCCI (@BCCI) October 23, 2025
முன்னதாக, ரோஹித் சர்மா 97 பந்துகளில் 73 ரன்கள், ஷ்ரேயாஸ் ஐயர் 77 பந்துகளில் 61 ரன்கள், அக்சர் படேல் 41 பந்துகளில் 44 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது. தனது இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு திரும்பிய லெக் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா, ஆஸ்திரேலியாவுக்காக 60 ரன்கள் விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேநேரத்தில், வேகப்பந்து வீச்சாளர் சேவியர் பார்ட்லெட் அற்புதமாக பந்து வீசி, 39 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.