T20 World Cup 2026: உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது? இன்று வெளியாகும் அட்டவணை!
India vs Pakistan Match Date: 2026 டி20 உலகக் கோப்பை வருகின்ற 2026 பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி 2026 மார்ச் 8ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் பாகிஸ்தான் தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையில் விளையாடும்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கோப்பையை (T20 World Cup 2026) இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகிறது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. கடைசியாக கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தின. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதேநேரத்தில் இந்த முறை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிக்கும். இந்த போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்தநிலையில்,இந்தப் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அதாவது 2025 நவம்பர் 25ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.
ALSO READ: டி20 உலகக் கோப்பை 2026 அட்டவணை நாளை வெளியீடு.. நேரடி ஒளிபரப்பை எங்கு காணலாம்?




2026 டி20 உலகக் கோப்பை அட்டவணை எப்போது அறிவிக்கப்படும்?
India and Pakistan will play each other in the 2026 Men’s T20 World Cup on February 15 in Colombo, with the full schedule set to be announced by the ICC on Tuesday.
India and Pakistan will be in a group with the USA, Netherlands and Namibia
Full story: https://t.co/gS6UnPauqQ pic.twitter.com/04gAGoJxHV
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 24, 2025
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அதாவது 2025 நவம்பர் 25ம் தேதி 2026 டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை அறிவிக்க உள்ளது . இந்த அறிவிப்பு இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு நடைபெறும். அறிக்கைகளின்படி , இந்தப் போட்டிக்கான இந்திய அணி பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் நமீபியாவுடன் குழுவாக சேர்க்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலின்படி, 2026 பிப்ரவரி 15ம் தேதி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி இந்தியாவில் விளையாடும்.
எந்தெந்த அணிகள் பங்கேற்கின்றன..?
2026 டி20 உலகக் கோப்பை வருகின்ற 2026 பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி 2026 மார்ச் 8ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் பாகிஸ்தான் தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையில் விளையாடும். இந்தியா மற்றும் இலங்கை உள்பட ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, இத்தாலி, நெதர்லாந்து , நமீபியா , ஜிம்பாப்வே, நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 20 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.
ALSO READ: தோல்வி அபாயத்தில் இந்திய அணி.. WTC பைனலுக்கு நுழையுமா..? நிலவரம் என்ன?
இந்திய அணி போட்டி அட்டவணை:
இந்தியா தனது முதல் லீக் ஸ்டேஜ் போட்டியில் வருகின்ற 2026 பிப்ரவரி 7ம் தேதி மும்பையில் அமெரிக்காவை எதிர்கொள்ளும். பின்னர், 2026 பிப்ரவரி 12ம் தேதி டெல்லியில் நமீபியாவை எதிர்கொள்ளும். பாகிஸ்தானை எதிர்கொண்ட பிறகு, 2026 பிப்ரவரி 18ம் தேதி அகமதாபாத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்ளும். லீக் ஸ்டேஜ் போட்டிக்கு பிறகு, 8 அணிகள் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும், தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். அதைத் தொடர்ந்து இறுதிப் போட்டி நடைபெறும் .