IPL 2026 Auction: புதிதாக 19 வீரர்கள்.. பட்டியலை நீட்டித்த பிசிசிஐ.. எதிர்பார்ப்பை தூண்டும் ஐபிஎல் 2026 மினி ஏலம்!
IPL 2026 Mini Auction: ஐபிஎல் 2026 ஏலத்திற்கு 1,390 பதிவு செய்யப்பட்ட வீரர்களின் நீண்ட பட்டியலிலிருந்து 350 வீரர்கள் பட்டியலிடப்பட்டனர். இந்தநிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாகா நேற்று அதாவது 2025 டிசம்பர் 15ம் தேதி இரவு தாமதமாக 19 வீரர்கள் அதிரடியாக சேர்க்கப்பட்டனர்.

ஐபிஎல் 2026 மினி ஏலம்
ஐபிஎல் 2026 மினி ஏலமானது (IPL 2026 Auction) இன்று அதாவது 2025 டிசம்பர் 16ம் தேதி அபுதாபியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. 77 வீரர்கள் மட்டுமே ஒட்டுமொத்தமாக தேவை என்ற நிலையில் 350க்கும் மேற்பட்ட வீரர்கள் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். 10 அணிகளின் பணத்தை பொறுத்தவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 64.3 கோடியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) ரூ. 43.4 கோடியையும் கைகளில் வைத்துள்ளது. அதேநேரத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் போன்ற பிற அணிகளும் தலா ரூ. 20 கோடிக்கும் அதிகமான பணத்தை வைத்திருக்கின்றன. முதலில், ஐபிஎல் 2026 ஏலத்திற்கு 1,390 பதிவு செய்யப்பட்ட வீரர்களின் நீண்ட பட்டியலிலிருந்து 350 வீரர்கள் பட்டியலிடப்பட்டனர். இந்தநிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாகா நேற்று அதாவது 2025 டிசம்பர் 15ம் தேதி இரவு தாமதமாக 19 வீரர்கள் அதிரடியாக சேர்க்கப்பட்டனர்.
பலமுறை இந்திய அணிக்காக டெஸ்ட் அணியில் இடம்பெற்ற போதிலும், இன்னும் சர்வதேச அளவில் அறிமுகமாகாத உள்நாட்டு வீரர் அபிமன்யு ஈஸ்வரனும் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
ALSO READ: தெறிக்கப்போகும் ஐபிஎல் மினி ஏலம்.. அணிகள் வாங்க மறுக்கப்போகும் 5 வீரர்கள்..!
யார் யார் அந்த 19 வீரர்கள்..?
- மணி ஷங்கர் முரா சிங் (இந்தியா)
- விரந்தீப் சிங் (மலேசியா)
- சாமா மிலிந்த் (இந்தியா)
- கேஎல் ஸ்ரீஜித் (இந்தியா)
- ஈதன் போஷ் (தென் ஆப்பிரிக்கா),
- கிறிஸ் கிரீன் (ஆஸ்திரேலியா),
- ஸ்வஸ்திக் சிகாரா (இந்தியா)
- ராகுல் ராஜ் நாம்லா (இந்தியா)
- விராட் சிங் (இந்தியா)
- திரிபுரேஷ் சிங் (இந்தியா)
- கைல்ஸ் வெர்ரேபினே (இந்தியா)
- பென் சியர்ஸ் (நியூசிலாந்து),
- ராஜேஷ் மொஹந்தி (இந்தியா)
- ஸ்வஸ்திக் சமல் (இந்தியா)
- சரண்ஷ் ஜெயின் (இந்தியா)
- சூரஜ் சங்கராஜூ (இந்தியா)
- தன்மய் அகர்வால் (இந்தியா)
மொத்தம் 77 இடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 31 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக 3 முறை சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு 13 இடங்களும், 2016 சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) 10 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ALSO READ: சூடுபிடிக்கும் 2026 ஐபிஎல் மினி ஏலம்.. எப்போது, எங்கே நேரடியாக பார்க்கலாம்?
இந்த வீரர்கள்தான் முக்கிய குறி..?
𝗚𝗘𝗧. 𝗦𝗘𝗧. 𝗔𝗨𝗖𝗧𝗜𝗢𝗡 🔨
Drop your predictions for today ✍️ 👇
Follow the #TATAIPLAuction 2026 today on https://t.co/4n69KTTxCB 💻#TATAIPL pic.twitter.com/MfDCToOnEA
— IndianPremierLeague (@IPL) December 16, 2025
இன்று அதாவது 2025 டிசம்பர் 16ம் தேதி அபுதாபியில் உள்ள எதிஹாட் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் 2026 ஏலத்தில் மதிஷா பதிரானா, கேமரூன் கிரீன், லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ரவி பிஷ்னோய் போன்ற வீரர்களை எடுக்க 10 அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும். துபாய் (2024) மற்றும் ஜெட்டா (2025) ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியாவிற்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடத்தப்படுவது இது 3வது முறையாகும்.