IPL 2026: தோனியிடம் துளியும் பேசவில்லை.. ஷாக் கொடுத்த ஜடேஜா! ரசிகர்கள் அதிர்ச்சி..!

Ravindra Jadeja - MS Dhoni: ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்பாக சஞ்சு மற்றும் ஜடேஜா வர்த்தக பரிமாற்றம் மூலம் அணிகள் மாற்றிக்கொண்டனர். ரவீந்திர ஜடேஜா தற்போது ராஜஸ்தான் அணிக்காகவும், ஆர்.ஆர். முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடுகின்றனர்.

IPL 2026: தோனியிடம் துளியும் பேசவில்லை.. ஷாக் கொடுத்த ஜடேஜா! ரசிகர்கள் அதிர்ச்சி..!

எம்.எஸ்.தோனி - ரவீந்திர ஜடேஜா

Published: 

31 Mar 2026 17:27 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 3வது போட்டியில் நேற்று அதாவது 2026 மார்ச் 30ம் தேதி கவுகாத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு ரவீந்திர ஜடேஜாவின் (Ravindra Jadeja) பந்துவீச்சும் ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது ரவீந்திர ஜடேஜா தனது பழைய அணியின் நினைவுகளால் அழுத வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தநிலையில், தோனியுடன் பேசுவது இல்லை என்று ரவீந்திர ஜடேஜா பேசியது தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: முதலிடத்தில் ராஜஸ்தான்.. எழ முடியாத நிலையில் சிஎஸ்கே.. ஐபிஎல் 2026 புள்ளிகள் அட்டவணை!

தோனியுடன் பேசுவதை நிறுத்திவிட்டாரா ஜடேஜா..?


ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியது குறித்து பேசிய ரவீந்திர ஜடேஜா, “தனது முன்னாள் அணிக்கு எதிராக விளையாடியது தனக்கு ஒரு வித்தியாசமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் எனக்கு விளையாட்டு வாழ்க்கையில் அங்கீகாரத்தை பெற்று தந்தது. இந்த போட்டி எனக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடியபோது இப்படித்தான் கொண்டாடுவேன். இப்படியே தொடரலாம் என்று நினைத்தேன். துபே முதல் பந்திலிருந்தே சுழற்பந்து வீச்சாளர்களை அடித்து ஆட நினைப்பார் என்பது எனக்குத் தெரியும். அது என் மனதில் இருந்தது. சிவம் துபே விக்கெட்டை தூக்கினால் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பலவீனமடையும் என்பது எனக்கு தெரியும்” என்றார்.

தொடர்ந்து தோனி குறித்தான கேள்விக்கு பதிலளித்த ரவீந்திர ஜடேஜா, “நான் மாஹி பாயிடம் (M.S.Dhoni) துளியும் பேசவில்லை. எப்படியும் அவர் தனது அலைபேசியை அணைத்தே வைத்திருப்பார்! நான் இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாறிவிட்டேன். சென்னை சூப்பர் கிங்ஸ் எதிராக விளையாடியது உணர்வுபூர்வமான ஒன்றாக இருந்தது என்றாலும், தோனியுடன் எந்தவிதமான உரையாடலும் நடைபெறவில்லை. ஆனால் நான் அவரைச் சந்திக்கும்போதெல்லாம் அவரிடம் நிறைய பேசுவேன்.” என்று தெரிவித்தார்.

ALSO READ: சிஎஸ்கே மீதான காதல்.. களத்திலேயே கதறி அழுத ஜடேஜா.. ரசிகர்கள் அரவணைப்பு!

வர்த்தக பரிமாற்றம்:

ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்பாக சஞ்சு மற்றும் ஜடேஜா வர்த்தக பரிமாற்றம் மூலம் அணிகள் மாற்றிக்கொண்டனர். ரவீந்திர ஜடேஜா தற்போது ராஜஸ்தான் அணிக்காகவும், சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காகவும் விளையாடுகின்றனர். ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் இருந்தார், மேலும் 2018, 2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் அந்த அணி கோப்பைகளை வென்றதில் முக்கியப் பங்காற்றினார்.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..