IPL 2026: தொடர் தோல்வி.. புள்ளிகள் பட்டியலில் தடுமாறும் மும்பை.. சென்னைக்கு எந்த இடம்?

IPL 2026 Points Table: ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் +2.055 என்ற சிறந்த ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, தாங்கள் ஆடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று 7 புள்ளிகளுடன் +0.720 என்ற ரன் ரேட் காரணமாக 2வது இடத்தில் உள்ளது.

IPL 2026: தொடர் தோல்வி.. புள்ளிகள் பட்டியலில் தடுமாறும் மும்பை.. சென்னைக்கு எந்த இடம்?

ஐபிஎல் 2026 புள்ளிகள் அட்டவணை

Published: 

13 Apr 2026 14:55 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 20வது போட்டியில் நேற்று அதாவது 2026 ஏப்ரல் 12ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்கு 241 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இருப்பினும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 3 தோல்விகளை சந்தித்துள்ளது.

ALSO READ: மும்பையை திண்டாட வைத்த பெங்களூரு.. வான்கடேவில் அசத்திய படிதார் படை!

ஒரு தோல்வியை கூட சந்திக்காத ராஜஸ்தான் ராயல்ஸ்:

நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 3வது வெற்றி இதுவாகும். அதே சமயம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.  இதன் காரணமாக, ஐபிஎல் 2026 புள்ளிகள் அட்டவணையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு போட்டியில் கூட தோற்காமல் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறது.

ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் +2.055 என்ற சிறந்த ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, தாங்கள் ஆடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று 7 புள்ளிகளுடன் +0.720 என்ற ரன் ரேட் காரணமாக 2வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் தாங்கள் ஆடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று +1.148 என்ற ரன் ரேட்டுடன் 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

ALSO READ: தோனியை தொடர்ந்து கோலி.. விரட்டும் காயம்.. களை இழக்குதா ஐபிஎல்?

ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத கொல்கத்தா:

டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் தற்போது தலா நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளன. அதே சமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் ஆடிய 4 போட்டிகளில் தலா ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்த மூன்று அணிகளும் தலா இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளன. இருப்பினும், ரன் ரேட் அடிப்படையில் டெல்லி 4வது இடத்திலும், குஜராத் 5வது இடத்திலும், லக்னோ 6வது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து, ஹைதராபாத், மும்பை மற்றும் சென்னை முறையே 7,8,9 ஆகிய இடங்களில் உள்ளன. இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, புள்ளிப் பட்டியலின் ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?