IPL 2026: ஐபிஎல் 2026 ஏல பட்டியலில் திடீர் மாற்றம்.. புது ட்விஸ்ட் கொடுத்த பிசிசிஐ!
IPL 2026 Mini Auction: ஐபிஎல் 2026 மினி-ஏலத்திற்கான இறுதிப் பட்டியலில் மொத்தமாக 247 இந்தியர்கள் மற்றும் 112 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 359 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ள 359 வீரர்களில் 77 வீரர்களை மட்டுமே 10 அணிகளும் ஏலத்தில் எடுக்கும்.

ஐபிஎல் 2026 ஏலம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நேற்று அதாவது 2025 டிசம்பர் 9ம் தேதி இந்திய பிரீமியர் லீக் 2026 மினி ஏலத்தில் (IPL 2026 Mini Auction) பங்கேற்பதற்கான வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்தநிலையில், தற்போதைய வீரர்களின் பட்டியலில் 9 புதிய வீரர்களை புதிதாக சேர்த்துள்ளது. ஐபிஎல் 2025க்கான மினி ஏலம் வருகின்ற 2025 டிசம்பர் 16ம் தேதி அபுதாபியில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக, 2025 டிசம்பர் 9ம் தேதி பிசிசிஐ பதிவு செய்யப்பட்ட 1,355 வீரர்களில் இருந்து 350 வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த பட்டியலை வெளியிட்ட ஒருநாளுக்கு பிறகு இன்று அதாவது 2025 டிசம்பர் 10ம் தேதி பிசிசிஐ திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டது. இதில் 9 புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மொத்த எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.
ALSO READ: மொத்தமாக 350 வீரர்கள்.. 77 இடங்களுக்கு கடும் போட்டி.. வெளியான மினி ஏல வீரர்கள் பட்டியல்!
மினி ஏலப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 9 வீரர்கள் யார்..?
9 more player’s now included in IPL 2026 mini auction. pic.twitter.com/nC37VKznlP
— MARCO (@Supremesir10) December 9, 2025
பிசிசிஐயால் சேர்க்கப்பட்ட புதிய வீரர்களில் ஸ்வஸ்திக் சிகாராவும் ஒருவர். இவர் கடந்த 2025 ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பிடித்திருந்தார். இந்த பட்டியலில் மலேசிய வீரர் வீரன்தீப் சிங்கும் இதில் இடம்பெற்றுள்ளார். மற்ற 7 வீரர்களில் திரிபுரா ஆல்ரவுண்டர் மணி சங்கர் முரசிங்க, சாமா மிலிந்த் (ஹைதராபாத்), கேஎல் ஸ்ரீஜித் (கர்நாடகா), ஈதன் போஷ் (தென்னாப்பிரிக்கா), கிறிஸ் கிரீன் (ஆஸ்திரேலியா), ராகுல் ராஜ் நம்லா (உத்தரகண்ட்) மற்றும் விராட் சிங் (ஜார்கண்ட்) ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எத்தனை வீரர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பு..?
ஐபிஎல் 2026 மினி-ஏலத்திற்கான இறுதிப் பட்டியலில் மொத்தமாக 247 இந்தியர்கள் மற்றும் 112 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 359 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ள 359 வீரர்களில் 77 வீரர்களை மட்டுமே 10 அணிகளும் ஏலத்தில் எடுக்கும். இந்த 77 வீரர்களில் 31 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
நிகில் சவுத்ரி யார்..?
350 வீரர்களின் பட்டியல் ஆரம்பத்தில் வெளியிடப்பட்டபோது, ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் விளையாடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர் நிகில் சவுத்ரி, இந்திய கிரிக்கெட் வீரர்களில் சேர்க்கப்பட்டார். அந்த நேரத்தில், லீக்கில் 110 வெளிநாட்டு வீரர்களும் 19 ஆஸ்திரேலிய வீரர்களும் அடங்குவர். இருப்பினும், பிசிசிஐ தனது தவறை சரிசெய்தது. நிகில் சவுத்ரி பின்னர் ஒரு வெளிநாட்டு கிரிக்கெட் வீரராக சேர்க்கப்பட்டார்.
ALSO READ: ஐபிஎல் ஏலத்தில் முதலில் எடுக்கப்படும் 6 வீரர்கள்.. விவரம்!
ஐபிஎல் 2026 ஏலத்தில் எந்த நாட்டைச் சேர்ந்த எத்தனை வீரர்கள் உள்ளனர்..?
இங்கிலாந்து – 21 வீரர்கள்
ஆஸ்திரேலியா – 20 வீரர்கள்
தென்னாப்பிரிக்கா – 16 வீரர்கள்
இலங்கை – 12 வீரர்கள்
ஆப்கானிஸ்தான் – 10 வீரர்கள்
வெஸ்ட் இண்டீஸ் – 9 வீரர்கள்
வங்கதேசம் – 7 வீரர்கள்
மலேசியா – 1 வீரர்