IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகள்.. பின்தங்கிய நிலையில் சிஎஸ்கே..!

Teams With Most Sixes in IPL: ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை அடித்துள்ள அணிகளின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் முதலிடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 3வது இடத்திலும் உள்ளன. தற்போதைய பதிவுகளின்படி, ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 1,823 சிக்ஸர்களுடன் அதிக சிக்ஸர்களை அடித்த அணியாக முதலிடத்தில் உள்ளது.

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகள்.. பின்தங்கிய நிலையில் சிஎஸ்கே..!

எம்.எஸ்.தோனி

Published: 

21 Mar 2026 15:32 PM

 IST

ஐபிஎல் 2026 (IPL 2026) சீசன் நீண்ட நாட்கள் காத்திருப்புக்கு பிறகு, வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்குகிறது. இந்த ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, ஐபிஎல் வரலாற்றில் எந்த அணி அதிக சிக்ஸர்களை அடித்துள்ளது என்பதை தெரிந்து கொள்வோம். இந்தப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் முதலிடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 3வது இடத்திலும் உள்ளன. தற்போதைய பதிவுகளின்படி, ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 1,823 சிக்ஸர்களுடன் அதிக சிக்ஸர்களை அடித்த அணியாக முதலிடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 1,774 சிக்ஸர்களுடன் 2வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 1,686 சிக்ஸர்களுடன் 3வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1,610 சிக்ஸர்களுடன் வது இடத்திலும் உள்ளன. இதன் மூலம், இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னும் முதல் 5 இடங்களில் நீடிக்கிறது.

ALSO READ: 2008 முதல் 2025 வரை.. ஐபிஎல்லில் பர்ப்பிள் மற்றும் ஆரஞ்சு கேப் வென்ற வீரர்கள் பட்டியல்!

சமீபத்திய ஆண்டுகளில், வேறு சில அணிகளும் சிக்ஸர் அடிப்பதில் ஒரு புதிய திறமையை வெளிப்படுத்தியுள்ளன. 2024-ல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரே சீசனில் 178 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்தது. பின்னர், 2025-ல், பஞ்சாப் கிங்ஸ் அணி 173 சிக்ஸர்களை அடித்துத் தங்கள் திறமையை நிரூபித்தது.

ஐபிஎல் வரலாற்றில் வரலாற்றில் தற்போது விளையாடி வரும் அணிகள் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள்

  1. மும்பை இந்தியன்ஸ் – 1823 சிக்ஸர்கள்
  2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 1774 சிக்ஸர்கள்
  3. பஞ்சாப் கிங்ஸ்– 1686 சிக்ஸர்கள்
  4. சென்னை சூப்பர் கிங்ஸ் – 1610 சிக்ஸர்கள்
  5. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 1593 சிக்ஸர்கள்
  6. டெல்லி கேபிடல்ஸ் – 1457 சிக்ஸர்கள்
  7. ராஜஸ்தான் ராயல்ஸ் – 1381 சிக்ஸர்கள்
  8. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 1158 சிக்ஸர்கள்
  9. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 484 சிக்ஸர்கள்
  10. குஜராத் டைட்டன்ஸ் – 394 சிக்ஸர்கள்

ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம்.. டாப் 2 பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி!

ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் யார்..?

  1. கிறிஸ் கெய்ல் – கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்காக கடந்த 2009 முதல் 2021 வரை 142 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 357 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.
  2. ரோஹித் சர்மா – ‘ஹிட்மேன்’ எனப் புகழ்பெற்ற ரோஹித் சர்மா, டெக்கான் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 272 போட்டிகளில் விளையாடி 302 சிக்ஸர்களை அடித்து 2வது இடத்தில் உள்ளார்.
  3. விராட் கோலி – 2008 முதல் 2025 வரை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி இதுவரை 267  ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 291 சிக்ஸர்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.
  4. எம்.எஸ். தோனி – சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி இதுவரை 278 ஐபிஎல் போட்டிகளில் 264 சிக்ஸர்களை அடித்து 4வது இடத்தில் உள்ளார்.
  5. ஏபி டி வில்லியர்ஸ் – ‘மிஸ்டர் 360 டிகிரி’ என அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ் டெல்லி மற்றும் பெங்களூரு அணிக்களுக்காக 184 ஐபிஎல் போட்டிகளில் 251 சிக்ஸர்களை அடித்து 5வது இடத்தில் இருக்கிறார்.

 

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்