AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Indian Cricket Team: ஜூனில் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடர்.. வெளியான இந்திய அணியின் சுற்றுபயணம்!

India vs Ireland T20I Series: டி20 தொடருக்காக இந்திய அணி அயர்லாந்துக்குச் செல்வது இது நான்காவது முறையாகும். இந்திய அணி இதுவரை அயர்லாந்தில் 6 டி20 போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான இந்தப் போட்டிகள் அனைத்தும் டப்ளினில் உள்ள மலாஹைட் ஸ்டேடியத்தில் நடைபெற்றன.

Indian Cricket Team: ஜூனில் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடர்.. வெளியான இந்திய அணியின் சுற்றுபயணம்!
இந்தியா Vs அயர்லாந்துImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Mar 2026 08:00 AM IST

2026 டி20 உலகக் கோப்பைக்கு (2026 T20 World Cup) பிறகு, இந்திய அணி வீரர்கள் தனித்தனியே பிரிந்து ஐபிஎல் 2026 சீசனில் விளையாட இருக்கின்றனர். ஐபிஎல் 2026 சீசனுக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், ஐபிஎல் 2026 சீசனுக்கு பிறகு இந்திய அணி (Indian Cricket Team) புதிய டி20 தொடரில் விளையாடவுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டிகள் வருகின்ற 2026 ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறும். அதன்படி, இந்த தொடருக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயர்லாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டி20 போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடும்.

ALSO READ: 2028 டி20 உலகக் கோப்பை எப்போது தொடங்குகிறது? எங்கு நடைபெறுகிறது?

இந்தியா-அயர்லாந்து போட்டி:

இந்தியா – அயர்லாந்து போட்டிக்கு பிறகு, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வருகின்ற 2026 ஜூலை 1ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, இந்திய அணி வருகின்ற 2026 ஜூன் மாதம் அயர்லாந்து அணியுடன் விளையாடும். இந்தத் தொடரின் தேதிகளை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடருக்குப் பிறகு, இந்திய அணி 5 டி20 போட்டிகளுக்காக 2026 ஜூலை 1, 4, 7, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இங்கிலாந்துக்குச் செல்லும். இதைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெறும். இதன் முதல் போட்டி 2026 ஜூலை 14ம் தேதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி 2026 ஜூலை 16ம் தேதியும், மூன்றாவது போட்டி 2026 ஜூலை 19ம் தேதியும் நடைபெறுகிறது.

இந்தியா-அயர்லாந்து டி20 தொடர்

டி20 தொடருக்காக இந்திய அணி அயர்லாந்துக்குச் செல்வது இது நான்காவது முறையாகும். இந்திய அணி இதுவரை அயர்லாந்தில் 6 டி20 போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான இந்தப் போட்டிகள் அனைத்தும் டப்ளினில் உள்ள மலாஹைட் ஸ்டேடியத்தில் நடைபெற்றன. இருப்பினும், ஒட்டுமொத்தமாக, இந்தியா விளையாடிய 8 டி20 போட்டிகளிலும் அயர்லாந்தை வீழ்த்தியுள்ளது.

ALSO READ: ஐபிஎல் 2026ஐ கண்காணிக்கும் தேர்வுக்குழு.. 2027 உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய அணி!

இனிவரும் காலங்களில் டி20 தொடர்களுக்கு இந்திய அணி பெரியளவில் முக்கியத்துவம் அளிக்காது. ஏனெனில், 2027-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதே இந்திய அணியின் தற்போதைய இலக்காக உள்ளது. எனவே, இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் தொடரை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதே இந்திய அணியின் நோக்கமாக இருக்கும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு, இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் தத்தமது அணிகளுக்காகப் போட்டியிடுவதில் மும்முரமாக இருப்பார்கள். அதன்பிறகு, இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும்.

Follow Us