IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட மிக நீளமான சிக்ஸர் எது..? அடித்த வீரர் யார்?

Biggest Six in IPL History: ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் கிறிஸ் கெய்லோ, பொல்லார்ட்,  ஏபி டி வில்லியர்ஸ், எம்.எஸ். தோனி போன்ற அனுபவ ஜாம்பவான்களோ, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்களோ இந்த சாதனையை படைக்கவில்லை.

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட மிக நீளமான சிக்ஸர் எது..? அடித்த வீரர் யார்?

ஐபிஎல் வரலாற்றில் அதிக தூரம் சிக்ஸர் அடித்த வீரர்கள்

Published: 

17 Mar 2026 15:38 PM

 IST

ஐபிஎல் (IPL) ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும்போதும், நடக்கும்போதும் எதிர்பார்ப்புகளை எகிற செய்தது. ஐபிஎல்லில் கடந்த 2 சீசன்களாக ஒவ்வொரு அணி (Teams) வீரர்களும் சிக்ஸர்களும், பவுண்டரிகளையும் பறக்கவிட்டு தங்களது அணிக்காக ரன்களை குவித்து வருகின்றனர். ஆனால், ஐபிஎல் வரலாற்றில் மிக நீளமான சிக்ஸரை அடித்தவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் மிக நீளமான சிக்ஸரை அடித்தவர் யார் என்பதும் உங்களுக்கு தெரியுமா? அந்தவகையில், ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட நேரம் சிக்ஸர் அடித்தவர் யார்? அந்த சாதனை முறியடிக்கப்பட்டதா உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: சிஎஸ்கே முதல் எல்எஸ்ஜி வரை.. ஐபிஎல்லில் விளையாடும் 10 அணிகளின் முழு விவரம்..!

ஐபிஎல்-லில் மிக நீண்ட சிக்ஸரை அடித்தவர் யார்?

ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் கிறிஸ் கெய்லோ, பொல்லார்ட்,  ஏபி டி வில்லியர்ஸ், எம்.எஸ். தோனி போன்ற அனுபவ ஜாம்பவான்களோ, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்களோ இந்த சாதனையை படைக்கவில்லை. அதன்படி, ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட சிக்ஸர் அடித்தவர் முன்னாள் சிஎஸ்கே வீரர் ஆல்பி மோர்கல். தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரும், தற்போதைய தென்னாப்பிரிக்கா அணியின் பயிற்சியாளருமான ஆல்பி மோர்கல், ஐபிஎல் வரலாற்றில் மிக நீளமான சிக்ஸருக்கான சாதனையை படைத்திருக்கிறார். ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஆல்பி மோர்கல் 125 மீட்டர் நீளத்திற்கு ஒரு சிக்ஸரை அடித்தார். இதுவரை ஐபிஎல் 18 சீசன்கள் கடந்த பின்னரும் யாரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை.

அடுத்தடுத்த மிக நீளமான சிக்ஸர்கள்:

  • 2008 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் பிரவீன் குமார் 124 மீட்டர் தூரத்திற்கு ஒரு பிரம்மாண்டமான சிக்ஸரை அடித்தார்.
  • ஐபிஎல் 2009ம் ஆண்டு ஆடம் கில்கிறிஸ்ட் 122 மீட்டர் தூரத்திற்கு மிக நீண்ட சிக்ஸரை அடித்தார்.
  • ஐபிஎல் 2010ம் ஆண்டு ராபின் உத்தப்பா 120 மீட்டர் தூரத்திற்கு மிக நீண்ட சிக்ஸரை அடித்தார்.
  • ஐபிஎல் 2011ம் ஆண்டு மீண்டும் ஆடம் கில்கிறிஸ்ட் 122 மீட்டர் தூரத்திற்கு பந்தை அடித்து மிக நீண்ட சிக்ஸரை அடித்தார்.
  • ஐபிஎல் 2012ம் ஆண்டு எம்.எஸ். தோனி 112 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடித்து, மிக நீண்ட சிக்ஸருக்கான சாதனை பட்டியலில் இடம் பிடித்தார்.
  • ஐபிஎல் 2013ம் ஆண்டு கிறிஸ் கெய்ல் 119 மீட்டர் தூரத்திற்கு ஒரு சிக்ஸரை அடித்தார்.
  • ஐபிஎல் 2014ம் ஆண்டு டேவிட் மில்லர் 102 மீட்டர் தூரத்திற்கு மிக நீளமான சிக்ஸரை அடித்தார்.
  • ஐபிஎல் 2015ம் ஆண்டு 111 மீட்டர் தூரத்திற்கு ஒரு சிக்ஸரை அடித்து, ஏபி டி வில்லியர்ஸ் மிக நீளமான சிக்ஸரை அடித்தார்.
  • ஐபிஎல் 2016ம் ஆண்டு பென் கட்டிங் 117 மீட்டர் தூரத்திற்கு மிக நீளமான சிக்ஸரை அடித்தார்.
  • ஐபிஎல் 2017ம் ஆண்டு மிக நீளமான சிக்ஸரை 109 மீட்டர் தூரத்திற்கு டிராவிஸ் ஹெட் அடித்தார்.
  • ஐபிஎல் 2018ம் ஆண்டு மிக நீளமான சிக்ஸ் 111 மீட்டர் தூரம் அடித்து ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் சாதனை பட்டியலில் இடம் பிடித்தார்.
  • ஐபிஎல் 2019ம் ஆண்டு 111 மீட்டர் தூர சிக்ஸரை எம்.எஸ். தோனி அடித்தார்.
  • ஐபிஎல் 2020ம் ஆண்டு மிக நீளமான சிக்ஸ்ரை நிக்கோலஸ் பூரன் 106 மீட்டர் தூரத்திற்கு அடித்தார்.

ALSO READ: பெங்களூருவில் போட்டிகளை நடத்த அரசு அனுமதி – ரசிகர்கள் உற்சாகம்

  • ஐபிஎல் 2021ம் ஆண்டு மிக நீளமான சிக்ஸ் 105 மீட்டர் தூரம் சிக்ஸர் அடித்தார் கீரன் பொல்லார்ட் பட்டியலில் இடம் பிடித்தார்.
  • ஐபிஎல் 2022ம் ஆண்டு அடிக்கப்பட்ட மிக நீளமான சிக்ஸ் 117 மீட்டர் ஆகும். இதை லியாம் லிவிங்ஸ்டோன் அடித்தார்.
  • ஐபிஎல் 2023ம் ஆண்டு ஃபாஃப் டு பிளெசிஸ் 115 மீட்டர் தூரத்திற்கு மிக நீளமான சிக்ஸரை அடித்தார்.
  • ஐபிஎல் 2024-ல் ஹென்ரிச் கிளாசென் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 108 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடித்தார்.
Follow Us
அமெரிக்க உலகப்போர் நினைவு சின்னம் முன்பு நடனமாடிய இந்தியர் - சர்ச்சையாகும் வீடியோ
ஈரானின் புதிய தலைவர் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.92 கோடி பரிசு - அமெரிக்க அறிவிப்பு
கேஸ் தட்டுப்பாடு - புதிதாக ஒரு இணையதளத்தையே உருவாக்கிய இளைஞர்கள்
மஹாராஜா 2 அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்