கேரளாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல உணவகங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கொச்சியை சேர்ந்த இரண்டு இளம் ஐடி தொழில்நுட்ப நிபுணர்கள் ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கி கவனம் ஈர்த்துள்ளனர். 22 வயதான வைஷாக் என்ற இளைஞர், கொச்சியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.