IPL 2026: SRH கேப்டன்ஷியில் திடீர் திருப்பம்.. கேப்டனாகிறாரா இஷான் கிஷன்..?

Sunrisers Hyderabad: 27 வயதான இஷான் கிஷன் தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த 2026 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாக இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் முதல் 3வது இடம் வரை, தனக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்து கொண்டார்.

IPL 2026: SRH கேப்டன்ஷியில் திடீர் திருப்பம்.. கேப்டனாகிறாரா இஷான் கிஷன்..?

இஷான் கிஷன்

Published: 

17 Mar 2026 20:35 PM

 IST

ஐபிஎல் 2026 (IPL 2026) தொடருக்கு முன்னதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணியில் சில மாற்றங்கள் நிகழலாம் என்று கூறப்படுகிறது. அதாவது, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் எப்போது அணியில் இணைவார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இதையடுத்து, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷனுக்கு கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது கிடைத்த தகவலின்படி, ஹைதராபாத் நிர்வாகம் இதுகுறித்து விவாதித்து வருகிறது. காயம் காரணமாக கம்மின்ஸ் தொடக்க போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால், இஷான் கிஷன் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பார். அதேநேரத்தில் அபிஷேக் சர்மாவுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம்.

ALSO READ: சிக்கலில் ஐபிஎல் 2026ன் முதல் போட்டி.. RCB – SRH போட்டி மாற்றமா?

இஷான் கிஷன் கேப்டனா?


27 வயதான இஷான் கிஷன் தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த 2026 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாக இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் முதல் 3வது இடம் வரை, தனக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்து கொண்டார். இஷான் கிஷனுக்கு உள்ளூர் மற்றும் அண்டர் 19 உலகக் கோப்பைகளில் அணியை வழிநடத்திய அனுபவம் உள்ளது. இஷான் கிஷன், ஐபிஎல் 2025 முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அங்கம் வகித்து வருகிறார். சமீபத்தில், அவர் தனது கேப்டன்சி திறமைகளை வெளிக்காட்டி, உள்ளூர் கிரிக்கெட்டில் ஜார்கண்ட் அணியை சையத் முஷ்டாக் அலி கோப்பையை வெல்ல வைத்தார்.

பாட் கம்மின்ஸூக்கு என்ன ஆனது..?

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, அவரது கீழ் முதுகில் ஏற்பட்ட தண்டுவட அழுத்தக் காயம் காரணமாக சிறிது காலம் விளையாட முடியாமல் போனது. அதன்பிறகு, ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு அணியில் இடம்பெற்ற போதிலும் 2025 டிசம்பரில் அடிலெய்டில் நடந்த 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு கம்மின்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. தொடர்ந்து, ஐசிசி டி20 உலகக் கோப்பையிலிருந்தும் காயம் காரணமாக விலகினார்.

ALSO READ: சிக்கலில் ஐபிஎல் 2026ன் முதல் போட்டி.. RCB – SRH போட்டி மாற்றமா?

முதல் போட்டியில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

ஐபிஎல் 2016 சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஐபிஎல் 2026ல் வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி தங்களது முதல் போட்டியில் விளையாடுகிறது. அந்த அணியின் முதல் போட்டி, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறும்.

 

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்