IPL 2026: பந்தை பிடிக்க முயற்சி .. என்கிடிக்கு தலையில் பலத்த காயம்.. ரசிகர்கள் ஷாக்!

Lungi Ngidi Injured: பஞ்சாப் கிங்ஸ் அணியின் இன்னிங்ஸின் 3வது ஓவரின் 3வது பந்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அக்சர் படேலின் பந்துவீச்சில் பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா மிட் - ஆஃப் திசையில் ஒரு ஷாட் அடிக்க முயன்றார். லுங்கி என்கிடி அந்த பந்தை பிடிக்க முயன்றபோது, பந்துக்கு தொலைவில் இருந்தது. என்கிடி அந்த பந்தை பிடிக்க பின்னோக்கி பாய்ந்து தவறவிட்டார்.

IPL 2026: பந்தை பிடிக்க முயற்சி .. என்கிடிக்கு தலையில் பலத்த காயம்.. ரசிகர்கள் ஷாக்!

லுங்கி என்கிடி காயம்

Published: 

25 Apr 2026 18:51 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 ஏப்ரல் 25ம் தேதி டெல்லி உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் (KL Rahul) 152 ரன்கள் எடுத்திருந்தார். 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் விளையாடி வருகிறது. இந்தநிலையில், பஞ்சாப் பேட்டிங்கின்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடிக்கு காயம் ஏற்பட்டது. என்கிடிக்கு தலையில் காயம் ஏற்பட்டதுடன், மிகுந்த வலியுடன் காணப்பட்டார்.

ALSO READ: 150 ரன்களை எட்டி கெத்து.. பஞ்சாப் அணியை பஞ்சர் செய்த கே.எல்.ராகுல்..!

மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட லுங்கி என்கிடி:


கேட்ச் பிடிக்க முயற்சித்தபோது லுங்கி என்கிடியின் தலையானது தரையில் பலமாக மோதியது. இதனால், வலியால் கடுமையாக போராடினார். இதையடுத்து, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட், ஒரு உள்ளூர் மருத்துவதுடன் லுங்கி என்கிடியை சோதனையை செய்தார். இதை தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டேடியத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டார். இதன் காரணமாக, ஆட்டம் 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில் ஸ்டேடியத்தில் உள்ள ரசிகர்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர்.

ALSO READ: ஷ்ரேயாஸ் விடுவிப்பு! கேகேஆர் செய்தது பெரிய தவறு.. ஒப்புகொண்ட முன்னாள் பயிற்சியாளர்!

என்ன நடந்தது..?

பஞ்சாப் கிங்ஸ் அணியின் இன்னிங்ஸின் 3வது ஓவரின் 3வது பந்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அக்சர் படேலின் பந்துவீச்சில் பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா மிட் – ஆஃப் திசையில் ஒரு ஷாட் அடிக்க முயன்றார். லுங்கி என்கிடி அந்த பந்தை பிடிக்க முயன்றபோது, பந்துக்கு தொலைவில் இருந்தது. என்கிடி அந்த பந்தை பிடிக்க பின்னோக்கி பாய்ந்து தவறவிட்டார். அப்போது, மொத்த எடையும் அவரது தலையில் அழுத்தம் கொடுத்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து, என்கிடிக்கு பதிலாக மூளையதிர்ச்சி மாற்று வீரராக துஷ்மந்தா சமீரா டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். என்கிடியின் காயத்தின் தீவிரம் இன்னும் தெரியவில்லை. ஆரம்பத்தில், அவர் மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் மைதானத்திற்கு வந்தார்.

Follow Us
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்