IPL 2026: பயிற்சியில் தோனி.. LSG எதிரான போட்டியில் விளையாடாதது ஏன்..?

MS Dhoni Injury: டாஸின் போது தோனியின் உடல்நிலை குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடும் எந்தத் தகவலையும் அளிக்காததால், இன்று அதாவது 2026 மே 10ம் தேதி லக்னோவுக்கு எதிராக தோனி ஏன் விளையாடவில்லை என்ற கேள்விக்கு உறுதியான பதில் கிடைக்கவில்லை . குறிப்பிடத்தக்க வகையில், தோனி குறித்த அணியின் ஒரே அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த 2026 மார்ச் 28ம் தேதி வெளியிடப்பட்டது.

IPL 2026: பயிற்சியில் தோனி.. LSG எதிரான போட்டியில் விளையாடாதது ஏன்..?

எம்.எஸ்.தோனி

Published: 

10 May 2026 16:32 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 10ம் தேதி நடைபெறும் 53வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சைத் தீர்மானித்தது. இருப்பினும், இந்தப் போட்டியிலும் சென்னை அணிக்காகக் களமிறங்காத எம்.எஸ். தோனியின் (MS Dhoni) மீதே ரசிகர்களின் கவனம் இருந்தது. நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 11வது லீக் போட்டியாகும். ஆனாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

ALSO READ: ஜார்க்கண்ட்-பீகாரில் அதிக வரி செலுத்திய நபர்.. முதலிடத்தில் தோனி!

பயிற்சியில் தோனி.. போட்டியில் விளையாடாதது ஏன்..?


மகேந்திர சிங் தோனி படிப்படியாக தனது உடற்தகுதியை மீட்டு வருகிறார் என்று சென்னை அணியின் பயிற்சியாளரும் அணி நிர்வாகமும் நீண்ட காலமாக கூறிவருகின்றனர். ஆனால் சீசன் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. தற்போது, ​​தோனியைச் சுற்றியுள்ள கேள்விகள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. தோனி வலைப்பயிற்சியில் ஈடுபடுவதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தொடர்ந்து பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், லக்னோவுக்கு எதிரான போட்டியில் தோனி ஏன் விளையாடவில்லை என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.

டாஸின் போது தோனியின் உடல்நிலை குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடும் எந்தத் தகவலையும் அளிக்காததால், இன்று அதாவது 2026 மே 10ம் தேதி லக்னோவுக்கு எதிராக தோனி ஏன் விளையாடவில்லை என்ற கேள்விக்கு உறுதியான பதில் கிடைக்கவில்லை . குறிப்பிடத்தக்க வகையில், தோனி குறித்த அணியின் ஒரே அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த 2026 மார்ச் 28ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், தோனி கால் தசை காயத்தால் அவதிப்படுவதாகவும், இரண்டு வாரங்கள் வரை தொடரில் இருந்து விலகியிருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதைத் தவிர, அணி நிர்வாகம் வேறு எந்தத் தகவலையும் பகிரவில்லை.

ALSO READ: ஐபிஎல்லில் இனி இதை செய்ய தடை.. வீரர்களுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை!

எம்.எஸ். தோனி உடற்தகுதியுடன் இருக்கிறாரா?

எம்.எஸ்.தோனியின் உடற்தகுதி குறித்து சென்னை அணி எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், சிஎஸ்கே அணி சமீபத்தில் தோனி வலைப்பயிற்சியில் பந்து வீசும் வீடியோவை வெளியிட்டது. பந்து வீசும்போது தோனி மிகவும் இயல்பாகக் காணப்பட்டார். அவருக்கு எந்தக் காயமும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், சிவம் துபே ஹெல்மெட்டில் ஏதோ பிரச்சனை இருந்தபோதும், அதனையும் தோனி சரிசெய்து கொடுத்தார். அதேநேரத்தில், இந்த சீசனில் தோனி சென்னை அணிக்காக விளையாடுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி