IPL 2026: ரஷீத் கான் சுழலில் வீழ்ந்த ராஜஸ்தான்.. 7வது வெற்றியை பதிவு செய்த குஜராத்
RR VS GT Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 மே 9ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.3 ஓவர்களில் 152 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், குஜராத் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 9ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணி 16.3 ஓவர்களில் 152 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், குஜராத் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இந்த சீசனில் குஜராத்தின் ஏழாவது வெற்றியாகும்.
குஜராத் புள்ளிகள் பட்டியலில் 2ம் இடம்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், குஜராத் அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம், பிளேஆஃப் சுற்றுக்கு அவர்கள் தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. குஜராத் அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளன. இதற்கிடையில், தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி, முதல் நான்கு இடங்களிலிருந்து வெளியேறியுள்ளது.
முதலில் பேட் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை பதிவு செய்தது. கேப்டன் சுப்மன் கில், 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களின் உதவியுடன் 84 ரன்கள் எடுத்து அணியின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். சாய் சுதர்ஷனும் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 55 ரன்கள் எடுத்தார்.




சேஸிங்கில் சொதப்பல்:
சேஸிங்கில் ராஜஸ்தான் அணி ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் விக்கெட்டுக்கு 17 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தனர். 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 16 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த சூர்யவன்ஷி ஆட்டமிழந்ததால் இந்த பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. முதல் விக்கெட் வீழ்ந்த பிறகு ராஜஸ்தான் அணியால் மீண்டு வர முடியவில்லை. அதன்பிறகு, அந்த அணி தனது 2வது விக்கெட்டை 40 ரன்களுக்கும், 3வது விக்கெட்டை 68 ரன்களுக்கும், 4வது விக்கெட்டை 87 ரன்களுக்கும், 5வது விக்கெட்டை 91 ரன்களுக்கும், 6வது விக்கெட்டை 115 ரன்களுக்கும், 7வது விக்கெட்டை 136 ரன்களுக்கும், 8வது விக்கெட்டை 141 ரன்களுக்கும், 9வது விக்கெட்டை 151 ரன்களுக்கும், 10வது விக்கெட்டை 152 ரன்களுக்கும் இழந்தது.
ALSO READ: ஊக்கமருந்து சோதனையை மேற்கொள்ளாத ஜெய்ஸ்வால்.. நோட்டீஸ் அனுப்பிய NADA! விளையாட தடையா?
அந்த அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 25 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 38 ரன்கள் எடுத்தார். சூர்யவன்ஷி 36, துருவ் ஜூரல் 24, கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3, ஷிம்ரோன் ஹெட்மியர் 6, தியோனன் ஃபெரீரா 4, ஷுபம் துபே 15, ஜோஃப்ரா ஆர்ச்சர் 5, தசுன் ஷனகா 16, துஷார் தேஷ் பாண்டே 1, பிரிஜேஷ் சர்மா 1* ரன்கள் எடுத்தனர். இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியால் 16.3 ஓவர்களில் 152 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.