IPL 2026: டெல்லியை ஓடவிட்ட ஓவர்டன்.. ஐபிஎல் 2026ல் முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை!
CSK vs DC Highlights: முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சன் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஐபிஎல் 2026 சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Csk Win Dc
ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 18வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 11ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) சஞ்சு சாம்சன் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஐபிஎல் 2026 சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ALSO READ: ஃப்ளிக் அடிச்ச இஷான் கிஷன்.. ஜென்சன் கை வைச்சதும் கேட்ச் ஆன அதிசயம்! PBKS அணிக்கு 220 ரன்கள் இலக்கு!
பேட்டிங்கில் சொதப்பும் ருதுராஜ் கெய்க்வாட்:
கடந்த 2025 சீசன் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதற்கிடையில், ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளிடம் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. இறுதியாக, ஐபிஎல் 2026 தொடர் தொடங்கி இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சிஎஸ்கே அணி புள்ளி அட்டவணையில் 2 புள்ளிகளைப் பெற்று, புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, சஞ்சு சாம்சன் 115 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். இது ஐபிஎல் தொடரில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த முதல் சதம் ஆகும். இதுதவிர, இளம் பேட்ஸ்மேன் ஆயுஷ் மத்ரே 59 ரன்களும், சிவம் துபே 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து, சென்னை அணி 212 ரன்களை எட்ட உதவினார்.
சிறப்பான தொடக்கம்:
டெல்லி கேப்பிட்டல்ஸ் இலக்கைத் துரத்தக் களமிறங்கியபோது, பதும் நிசங்கா 24 பந்துகளில் 41 ரன்கள் கே.எல். ராகுல் 18 ரன்களும் எடுத்தது. இதன் காரணமாக, டெல்லி அணி வெறும் ஐந்து ஓவர்களில் 61 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு, சென்னையின் வேகப்பந்து வீச்சாளர்கள் அடுத்த 15 ரன்களுக்குள் டெல்லியின் 4 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்து, அவர்களைப் பின்னடைவில் ஆழ்த்தினர். இதன் பிறகு, டேவிட் மில்லர் 17 ரன்களும், அஷுதோஷ் சர்மா 19 ரன்களும் எடுத்தனர்.
ALSO READ: கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காட்டிய வாணவேடிக்கை.. 219 ரன்கள் எடுத்தும் வீழ்ந்த ஹைதராபாத்!
டிரிஸ்டன் ஸ்டப்ஸின் 38 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து தனியாக போராடினார். ஒரு கட்டத்தில், ஸ்டப்ஸ் டெல்லியின் வெற்றியை பெற்று தருவார் என நினைத்தபோது, ஜேமி ஓவர்டன் பந்தில் ஆட்டமிழ்ந்தார். இதனால், சென்னையின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தது. சிஎஸ்கே அணிக்காக ஜேமி ஓவர்டன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.