IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக மெய்டன்.. முதலிடத்தில் பும்ரா இல்லையா?
Most Maiden Overs in IPL: ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினாலும், அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்களைக் கூட எப்படி ரன் எடுக்க தடுமாற வைப்பது என்று தெரிந்த சில தலைசிறந்த பந்துவீச்சாளர்களும் உள்ளனர். அத்தகைய சக்திவாய்ந்த பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் வரலாற்றில் பல மெய்டன் ஓவர்களை வீசியுள்ளனர்.

அதிக மெய்டன் வீசிய பந்துவீச்சாளர்கள்
சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் (IPL) போன்ற டி20 லீக்குகளில் ஒரு காலத்தில் 200 ரன்கள் எடுத்தால் மிகப்பெரிய இலக்காக பார்க்கப்பட்டது. ஆனால், சமீப காலங்களில் 300 ரன்கள் எடுக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நிரூபிக்கும் சில புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் (Batsmans) அதிரடியாக விளையாடினாலும், அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்களைக் கூட எப்படி ரன் எடுக்க தடுமாற வைப்பது என்று தெரிந்த சில தலைசிறந்த பந்துவீச்சாளர்களும் உள்ளனர். அத்தகைய சக்திவாய்ந்த பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் வரலாற்றில் பல மெய்டன் ஓவர்களை வீசியுள்ளனர். அதன்படி, ஐபிஎல் வரலாற்றில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய 7 பந்துவீச்சாளர்களின் பட்டியலை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான விக்கெட் கீப்பர் யார்? டாப் 5 லிஸ்ட் இதோ!
ஐபிஎல் வரலாற்றில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பந்துவீச்சாளர்கள்:
புவனேஷ்வர் குமார்
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாலர் புவனேஷ்வர் குமார் 14 மெய்டன் ஓவர்கள் வீசி, இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஐபிஎல்-லில் தயாரிக்கப்படும் ஆடுகளங்கள் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்களைச் சிரமப்படுத்தும், ஆனால் புவனேஷ்வரின் திறமை தனித்துவமான ஸ்விங் பல பேட்ஸ்மேன்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.
பிரவீன் குமார்
இரண்டாவதாக இந்த பட்டியலில் இந்தியா அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ‘கிங் ஆஃப் ஸ்விங்’ பிரவீன் குமார் உள்ளார். பிரவீன் குமார் தனது ஐபிஎல் வாழ்க்கையில் 14 மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார்.
டிரென்ட் போல்ட்
ஐபிஎல் வரலாற்றில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட மெய்டன் ஓவர்கள் வீசிய முதல் வெளிநாட்டுப் பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ஆவார். ஐபிஎல்லில் போல்ட் இதுவரை 11 முறை மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார்.
இர்பான் பதான்:
ஐபிஎல்லில் இதுவரை 10 மெய்டன் ஓவர்கள் வீசி இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் 4வது இடத்தில் உள்ளார். சுவாரஸ்யமாக, இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ள பந்து வீச்சாளர்களும் ஸ்விங் பந்து வீச்சாளர்களாக உள்ளனர்.
பட்டியலில் பும்ரா இல்லையா..?
ஐபிஎல் வரலாற்றில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய பட்டியலில் 8 மெய்டன் ஓவர்களை வீசி தவால் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா, இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
ALSO READ: 2026 ஐபிஎல்லில் எந்தெந்த அணிகளுக்கு யார் யார் கேப்டன்..? முழு பட்டியல் இதோ!
ஐபிஎல்லில் அதிக மெய்டன் ஓவர்கள்:
- புவனேஷ்வர் குமார் – 14
- பிரவீன் குமார் – 14
- டிரென்ட் போல்ட் – 11
- இர்பான் பதான் – 10
- தவால் குல்கர்னி – 8
- ஜஸ்பிரித் பும்ரா – 8
- லசித் மலிங்கா – 8