IPL 2026 Auction: 18 கோடிக்கு பத்திரனா.. 7 கோடிக்கு ரவி பிஷ்னோய்.. அதிக தொகைக்கு சுற்றி வளைத்த அணிகள்!
Matheesha Pathirana: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வந்த மதீஷா பத்திரனாவை ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில், ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ரூ. 18 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. முன்னதாக, ரூ. 23.25 கோடிக்கு கேமரூன் க்ரீனை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மதீஷா பத்திரனா - ரவி பிஷ்னோய்
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் (IPL 2026 Auction) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகபட்ச தொகையாக ரூ. 18 கோடிக்கு மதீஷா பத்திரனாவை வாங்கியது. மதீஷா பத்திரனாவை ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில், ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ரூ. 18 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. முன்னதாக, ரூ. 23.25 கோடிக்கு கேமரூன் க்ரீனை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், ரூ. 7.2 கோடிக்கு சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரூ. 2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகீல் ஹொசைனை ஏலத்தில் எடுத்தது.
கேகேஆர் அணியில் பத்திரனா:
Another big buy for @KKRiders 💜
This time it’s Matheesha Pathirana ⚡️
💰 INR 18 Crore#TATAIPLAuction | #TATAIPL pic.twitter.com/nVi2cqyYW7
— IndianPremierLeague (@IPL) December 16, 2025
ALSO READ: வெங்கடேஷ் ஐயருக்கு ஆர்சிபி போட்ட கொக்கி.. ரூ. 7 கோடிக்கு மடக்கி அணியில் சேர்ப்பு!
ரவி பிஷ்னோய்:
வலது கை லெக் ஸ்பின்னரான ரவி பிஷ்னோய் கடந்த 2025 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இதன் காரணமாக, லக்னோ அணி ரவி பிஷ்னோயை விடுவித்தது. அதேநேரத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிஷ்னோய் மீது நம்பிக்கை வைத்து ஏலத்தில் எடுத்துள்ளது.
ரவி பிஷ்னோயை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.இருப்பினும், 5.8 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்னை அணி ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்த்தபோது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் நுழைந்தது. பிஷ்னோயை வாங்க காவ்யா மாறன் 7 கோடி ரூபாய் வரை பந்தியத்தில் போட்டியிட்டார். ஆனால் இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ALSO READ: கேமரூன் க்ரீனுக்கு பக்கா குறி.. ரூ. 25.20 கோடிக்கு தூக்கிய கொல்கத்தா அணி!
அகீல் ஹொசைன்:
READY PLAYER 1️⃣🦁
Welcome to the den, AKEAL!🥳#WhistlePodu #IPLAuction pic.twitter.com/w7sgmybRcL— Chennai Super Kings (@ChennaiIPL) December 16, 2025
2026 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் அகீல் ஹொசைனை சென்னை சூப்பர் கிங்ஸ் அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு வாங்கியது. கடந்த 2025 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஒரு போட்டியில் விளையாடினார். ஐபிஎல் தவிர, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) மற்றும் பிக் பாஷ் லீக் (BBL) உட்பட உலகெங்கிலும் உள்ள பல டி20 லீக்குகளில் அகீல் ஹொசைன் விளையாடி வருகிறார்.