IPL 2026: எல்பிஜி தட்டுப்பாடு..! தள்ளிப்போகிறதா ஐபிஎல் 2026..? ஐபிஎல் தலைவர் விளக்கம்!
IPL 2026- LPG: மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போர் காரணமாக தற்போதைய நிலைமை தொடர்ந்தால், பிசிசிஐ வருகின்ற 2026 ஐபிஎல் சீசனில் சில மாற்றங்களை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஐபிஎல் 2026 லீக்கை போன்ற விளையாட்டை காட்டிலும் தொழில்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உட்பட்டவையே முக்கியம் என்று பிசிசிஐ கருதுகிறது.

ஐபிஎல் - எல்பிஜி
ஈரானுடனான அமெரிக்கா-இஸ்ரேல் மோதல் காரணமாக பல நாடுகள் பொருளாதார மற்றும் பிற பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தநிலையில், இந்தியாவும் (India) தற்போது சில சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளது. எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, உள்நாட்டு மற்றும் அத்தியாவசிய உள்நாட்டு அல்லாத துறைகளுக்கு LPG விநியோகம் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, இது விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 (IPL 2026) ஐயும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பிசிசிஐ தற்போது பல நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் ஒரு முடிவை எடுப்போம் – அருண் துமல்
இந்த விஷயத்தின் தீவிரம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தலைவர் அருண் துமல் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ”நாங்கள் நிலைமையை மதிப்பாய்வு செய்து வருகிறோம். இந்தப் போரில் ஒவ்வொரு நாளும் புதிய முன்னேற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எனவே, இந்த நேரத்தில் எதையும் உறுதியாகக் கூற முடியாது. ஐபிஎல் 2026 அடுத்த சில நாட்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் சூழ்நிலையின் தீவிரத்தைப் பொறுத்து நாங்கள் ஒரு முடிவை எடுப்போம்” என்று துமல் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
ALSO READ: ஐபிஎல் 2026ல் அட்டவணை எப்போது வெளியீடு? அப்டேட் கொடுத்த பிசிசிஐ செயலாளர்!
ஐபிஎல் அட்டவணை தாமதமானதற்கான காரணம்:
ஐபிஎல் 2026 மார்ச் 28ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் தேர்தல்கள் வரவுள்ள நிலையில், தேதி குறித்த விவரங்கள் குறித்து பிசிசிஐ கண்காணித்து வருகிறது. மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போர் காரணமாக தற்போதைய நிலைமை தொடர்ந்தால், பிசிசிஐ வருகின்ற 2026 ஐபிஎல் சீசனில் சில மாற்றங்களை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஐபிஎல் 2026 லீக்கை போன்ற விளையாட்டை காட்டிலும் தொழில்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உட்பட்டவையே முக்கியம் என்று பிசிசிஐ கருதுகிறது.
இதற்கிடையில், பல அணிகள் ஏற்கனவே அந்தந்த நகரங்களில் தங்களது பயிற்சி முகாம்களைத் தொடங்கியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் முகாம் கிட்டதட்ட 10 நாட்களுக்கு மேலாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அதேபோல், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தங்கள் பயிற்சி முகாமை வெகு சீக்கிரமாகவே தொடங்கிவிட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த சில நாட்களாக தர்மசாலாவில் முகாமிட்டு சுமார் 10 வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ALSO READ: களத்தில் மிட்செல் மேல் பாய்ந்த பந்து.. அசால்ட் செய்த அர்ஷ்தீப்.. அபராதம் விதித்த ஐசிசி!
பாதிக்கப்பட்ட பெங்களூரு-சென்னை ஹோட்டல்கள்:
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்ந்து அதிகரித்து வருவது பெட்ரோலியம் மற்றும் எல்பிஜி பொருட்களின் விநியோகத்தைப் பாதித்துள்ளது. கடந்த சில நாட்களாக, பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் சங்கங்கள் தங்களிடம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே எல்பிஜி விநியோகம் மீதமுள்ளதாக தெரிவித்தன. மேலும், சில பெரிய ஹோட்டல்கள் மூடப்பட்டு விட்டதாகவும், ஒரு சில ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறிவிட்டதாகவும் தெரிவித்தனட். எல்பிஜி பயன்பாட்டை கருத்தில் கொண்டு பல ஹோட்டல்கள் தங்கள் மெனுக்களில் தோசை உள்ளிட்ட விஷயங்களில் மாற்றங்களை செய்துள்ளன.