IPL 2025 Qualifier 2: வந்து வந்து சென்ற மழை.. இறுதியாக தொடங்கிய மும்பை – பஞ்சாப் போட்டி..!

Punjab Kings vs Mumbai Indians: ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப், பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால், தொடர் மழையால் போட்டி பலமுறை நிறுத்தப்பட்டது. கட் ஆஃப் நேரம் இரவு 10 மணி. மழை நீடித்தால், 5 ஓவர் போட்டி நடத்தப்படும். லீக்ட்டையில் முதலிடம் பிடித்த பஞ்சாப், மோசமான வானிலை காரணமாக போட்டி முடிவடையாவிட்டால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

IPL 2025 Qualifier 2: வந்து வந்து சென்ற மழை.. இறுதியாக தொடங்கிய மும்பை - பஞ்சாப் போட்டி..!

ரோஹித் சர்மா - மழை

Published: 

01 Jun 2025 22:04 PM

 IST

ஐபிஎல் 2025ல் (IPL 2025) பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2 போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸ் போட்ட சிறிதுநேரத்திலேயே மழை பெய்ய தொடங்கியதால், உள்ளே வந்த வீரர்களும், நடுவர்களும் மீண்டும் டக் அவுட் சென்றனர். இதனால், பிட்சானது உடனடியாக கவர் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே மழை நின்றுவிட்டது. இதன்பிறகு, மீண்டும் ஆட்டத்தை தொடங்க முயற்சிகள் நடந்தபோது மழை மீண்டும் பலத்த சத்தத்துடன் பெய்தது. இந்தநிலையில், குவாலிஃபையர் 2ன் கட் ஆஃப் நேரம் என்ன..? போட்டி எத்தனை ஓவர்கள் நடத்தப்படும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

கட் ஆப் நேரம் எப்போது..?

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 2வது தகுதி சுற்று போட்டிக்கான கட் ஆஃப் நேரம் இரவு 10 மணி ஆகும். அதாவது போட்டி 10 மணிக்கு தொடங்கினால் போட்டிகளில் ஓவர்கள் குறைப்பு நடைபெறும். இருப்பினும், இந்த போட்டிக்கு 120 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மழை பெய்து போட்டியை நடத்த சிறிது சாத்தியம் இருந்தாலும், போட்டியை தீர்மானிக்க தலா 5 ஓவர்கள் கொண்ட போட்டி நடைபெறும்.

போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்?

சரி, போட்டி நடைபெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன, அதற்கும் ஒரு முடிவு இருக்கும். காரணம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தின் வடிகால் அமைப்பு மிகவும் நன்றாக உள்ளது. மழை நின்ற அரை மணி நேரத்திற்குள் மைதானம் ஆட்டத்திற்குத் தயாராகிவிடும். இருப்பினும், சில சூழ்நிலைகளில் மோசமான வானிலை காரணமாக போட்டி முடிவடையவில்லை என்றால், பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். காரணம், லீக் கட்டத்தில் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அதேசமயம், மும்பை அணி நான்காவது இடத்தில் இருந்தது.

போட்டி தொடக்கம்..

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தற்போது மழை முழுவதும் நின்று, தண்ணீர் வடிகால் வழியாக வெளியேறியதால் போட்டி தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் பேரிஸ்டோவ் களமிறங்கியுள்ளன.

பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கும் சாய் பல்லவி?
ஜிம்மில் பயிற்சி செய்தபோது திடீரென பார்வை இழந்த 27 வயது இளைஞர்