AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: கட்டாய வெற்றிக்காக களமிறங்கும் கொல்கத்தா.. லாக் செய்யுமா லக்னோ..?

KKR vs LSG Playing XI: ஐபிஎல்-இன் 19-வது சீசனில் இதுவரை இரு அணிகளின் ஆட்டமும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. தொடக்கப் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி தடுமாறி வருகிறது. குறிப்பாக கேமரூன் கிரீனின் மோசமான ஃபார்ம் அணி நிர்வாகத்திற்கு கவலையை தருகிறது. மறுபுறம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) இந்த சீசனில் ஒரு சமநிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

IPL 2026: கட்டாய வெற்றிக்காக களமிறங்கும் கொல்கத்தா.. லாக் செய்யுமா லக்னோ..?
அஜிங்க்யா ரஹானே - ரிஷப் பண்ட்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Apr 2026 08:00 AM IST

ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 15வது போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது. இதில், கொல்கத்தாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் கேகேஆர் மற்றும் எல்எஸ்ஜி அணிகள் இன்று அதாவது 2026 ஏப்ரல் 9ம் தேதி மோதவுள்ளன. கொல்கத்தா ரசிகர்களுக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியமானது. ஏனெனில், ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா அணி இதுவரை முதல் வெற்றியை பதிவு செய்யவில்லை. இதன் காரணமாக, கொல்கத்தா அணி (Kolkata Knight Riders) உள்ளூர் சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும். பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கலாம். ஆனாலும் மாலையில் பனியும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். டாஸ் வென்றால் இரு அணியின் கேப்டன்கள் முதலில் பந்துவீசத் தீர்மானிக்கலாம்.

ALSO READ: தாமதமாகும் எம்.எஸ்.தோனி வருகை.. ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி!

தடுமாறும் கொல்கத்தா:

ஐபிஎல்-இன் 19-வது சீசனில் இதுவரை இரு அணிகளின் ஆட்டமும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. தொடக்கப் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி தடுமாறி வருகிறது. குறிப்பாக கேமரூன் கிரீனின் மோசமான ஃபார்ம் அணி நிர்வாகத்திற்கு கவலையை தருகிறது. மறுபுறம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) இந்த சீசனில் ஒரு சமநிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பு கொல்கத்தா தனது பேட்டிங் வரிசையை நிலைப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் லக்னோ தனது வெற்றிப் பயணத்தைத் தொடர விரும்பும். இந்த சீசனில் புள்ளிப் பட்டியலில் முன்னேற, இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி கட்டாயம் வெல்ல வேண்டிய ஆட்டமாகும்.

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான நேருக்கு நேர் மோதல், ஏறக்குறைய சமமாகவே இருந்துள்ளது. இதுவரை இரு அணிகளும் 7 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், லக்னோ 4 முறையும், கொல்கத்தா 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

ALSO READ: ஆரஞ்சு தொப்பியுடன் ஜெய்ஸ்வால்.. பர்ப்பிள் கேப் யாரிடம் உள்ளது..? முழு விவரம்!

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), சுனில் நரைன், ரச்சின் ரவீந்திரா, ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ரின்கு சிங், டிம் சீஃபர்ட்/ரோவ்மேன் பவல், ராமன்தீப் சிங், அனுகுல் ராய், வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, கார்த்திக் தியாகி.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஜோஷ் இங்கிலிஸ், ரிஷப் பந்த், ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, முகமது ஷமி, திக்வேஷ் ரதி, மயங்க் யாதவ், அவேஷ் கான்

 

Follow Us