Amol Muzumdar: கிரிக்கெட்டில் மங்கிய வாய்ப்பு.. பயிற்சியாளராக பயணம்.. யார் இந்த அமோல் மஜும்தார்..?

Who Is Amol Muzumdar: இந்தியாவிற்காக அமோல் மஜும்தார் விளையாடியது இல்லை என்றாலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி போன்ற வீரர்களுடன் இணைந்து விளையாடி விளையாட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். ஆனால் அவரது அணுகுமுறை இளம் தலைமுறையினரின் கிரிக்கெட்டுக்கு பேருதவியாக இருந்தது.

Amol Muzumdar: கிரிக்கெட்டில் மங்கிய வாய்ப்பு.. பயிற்சியாளராக பயணம்.. யார் இந்த அமோல் மஜும்தார்..?

அமோல் மஜும்தார்

Published: 

03 Nov 2025 14:54 PM

 IST

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை (ICC Womens World Cup) போட்டியை இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team) வென்று புதிய வரலாறு படைத்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் இந்த வெற்றிக்காக அதிகம் பேசப்படும் அதே வேளையில், மற்றொரு நட்சத்திரம் பற்றியும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது. களத்திற்கு வெளியே இருந்து முழு கதையையும் மாற்றிய இந்த மனிதர், மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அசத்தினார். ஆம், தற்போது செய்திகளில் இடம்பெற்றுள்ள மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அமோல் மஜும்தாரை (Amol Muzumdar) பற்றி தெரிந்து கொள்வோம்.

மக்கள் தொடர்ந்து கூகிளில் அமோல் மஜூம்தாரை தேடி, அவர் யார் என்று அறிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள். உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காகப் பாராட்டப்படுகிறார்கள், ஆனால் பயிற்சியாளரைச் சுற்றி ஒரு ரகசிய ஹீரோவாகவே இருக்கிறார், அவர் பெயர் கவுதம் கம்பீர் அளவிற்கு பிரபலம் இல்லையென்றாலும், இந்திய மகளிர் அணியின் வளர்ச்சிக்கு இவர் செய்தது ஏராளம்.

ALSO READ: வரலாறு படைத்த இந்திய அணி.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை தூக்கிய ஹர்மன்ப்ரீத் படை!

அமோல் மஜும்தார் யார்?


அமோல் மஜும்தார் கடந்த 2023 அக்டோபர் மாதம் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில், இந்திய மகளிர் அணி அடுத்த முன்னேறுவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருந்தது. முன்னதாக, இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் பதவி நிலையற்றதாக இருந்தது, தேர்வு மற்றும் தலைமை குறித்து அதிக கேள்விகள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, அமோல் மஜும்தார் நியமனம் அதிகளவில் சர்ச்சையையும் கிளப்பியது. ஏனெனில், கிரிக்கெட் களத்தில் அதிக அனுபவம் இருந்தாலும் இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் ஒருபோதும் விளையாடியதில்லை. அமோல் மஜும்தாரின் தகுதிகளை சிலர் சந்தேகிக்க இதுவே போதுமான காரணமாக இருந்தது.

இந்தியாவிற்காக அமோல் மஜும்தார் விளையாடியது இல்லை என்றாலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி போன்ற வீரர்களுடன் இணைந்து விளையாடி விளையாட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். பின்னர் இந்தியாவின் ஜூனியர் அணிகளுடனான தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்தில் ஜூனியர் அணிகளுக்கு அமோல் பயிற்சி அளித்தார். அமோல் மஜும்தார் பெரிய ரசிகர் பட்டாளம் இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் அவரது அணுகுமுறை இளம் தலைமுறையினரின் கிரிக்கெட்டுக்கு பேருதவியாக இருந்தது.

தனக்கான அங்கீகாரம் இல்லாவிட்டாலும், கடின உழைப்பின் மதிப்பை அமோல் மஜும்தார் என்று விட்டுகொடுத்தது கிடையாது. அதனால்தான் அமோல் ஆதிக்கம் செலுத்துவதை காட்டிலும், பயிற்சி வழங்குவதில் கவனம் செலுத்தினார். இது, 52 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுக்க காரணமாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக, உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், அமோல் மஜும்தார் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

ALSO READ: கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி.. பிரதமர் மோடி முதல் சச்சின் வரை வாழ்த்து மழை!

அமோல் மஜும்தாரின் கிரிக்கெட் வாழ்க்கை:

அமோல் மஜும்தார் 171 முதல் தர போட்டிகளில் விளையாடி 30 சதங்கள் மற்றும் 60 அரைசதங்களுடன் 11,167 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், லிஸ்ட் ஏ பிரிவில், அமோல் மஜும்தார் 113 போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் 26 அரைசதங்களுடன்  3,286 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 14 டி20 போட்டிகளில் ஒரு அரைசதம் உட்பட 174 ரன்களையும் எடுத்துள்ளார்.

 

Related Stories
Womens World Cup 2025: பெண்கள் கிரிக்கெட் விளையாட தேவையில்லை.. வைரலாகும் சவுரவ் கங்குலியின் பழைய வீடியோ!
Women’s World Cup Final: இந்திய அணிக்கு ஆதரவு! நமது கிரிக்கெட் வீரர்கள் எங்கே? விளாசிய தென்னாப்பிரிக்கா எழுத்தாளர்!
Indian Cricket Schedule: 2026ல் இந்திய கிரிக்கெட் அணி எப்போது யாருடன் விளையாடுகிறது..? முழு அட்டவணை இதோ!
கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி.. பிரதமர் மோடி முதல் சச்சின் வரை வாழ்த்து மழை!
Women’s World Cup Final: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
IND-W vs SA-W Final: வரலாறு படைத்த இந்திய அணி.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை தூக்கிய ஹர்மன்ப்ரீத் படை!