Smriti Mandhana: காஷ்மீர் சிறுமியின் ஆசை.. ஸ்மிருதி மந்தனா செய்த செயல்.. நெகிழ்ந்த நெட்டிசன்கள்..!
Smriti Mandhana's Heartfelt Reply To Kashmiri Girl: திரைப்பட தயாரிப்பாளர் கபீர் கான், காஷ்மீரில் உள்ள அரு பள்ளத்தாக்கில் ஒரு சிறுமியை சந்தித்தது மட்டுமின்றி, காஷ்மீரின் அழகிய காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்போது, அந்த குட்டி ரசிகை, தான் ஸ்மிருதி மந்தனாவின் மிகப்பெரிய ரசிகை என்று கபீர் கானிடம் கூறினார்.

ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் (Indian Womens Cricket Team) நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana), காஷ்மீரை சேர்ந்த ஒரு குட்டி ரசிகைக்கு ஒரு மனதை தொடும் உணர்ச்சிபூர்வமான செய்தியை பகிர்ந்து கொண்டார். தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளர் கபீர் கான், காஷ்மீரில் உள்ள அரு பள்ளத்தாக்கில் ஒரு சிறுமியை சந்தித்தது மட்டுமின்றி, காஷ்மீரின் அழகிய காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்போது, அந்த குட்டி ரசிகை, தான் ஸ்மிருதி மந்தனாவின் மிகப்பெரிய ரசிகை என்று கபீர் கானிடம் கூறினார்.
ALSO READ: ஐபிஎல் முதல் ஆசியக் கோப்பை வரை.. 2025ல் கிரிக்கெட்டில் நடந்த டாப் 5 சர்ச்சை!
கபீர் கான் கூறியது என்ன..?
இதுகுறித்து கபீர் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “காஷ்மீரில் கேமராவுடன் பயணம் செய்வது எப்போதுமே மாயாஜால தருணங்களால் நிறைந்திருக்கும். காஷ்மீரின் அருவில் நான் சந்தித்த இந்த சிறுமியை போல, ஸ்மிருதி மந்தனாவிடம் தான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகை என்று சொல்ல சொன்னாள். இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இந்த பதிவை பார்ப்பார் என்று நம்புகிறேன்.
மலை நீர்வீழ்ச்சியால் சூழப்பட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாடும் சிறுவர்களில், யாராவது ஒரு சிக்ஸர் அடித்தால், பந்து காற்றில் பள்ளத்தாக்கின் குறுக்கே நேராக ஜீலம் நதியில் விழுகிறது.” என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
கபீர் கானின் பதிவை பலரும் லைக் செய்து ஷேர் செய்து வருகின்றனர். ரசிகர்கள் முதல் பல தொழிலதிபர்கள் வரை பலர் இதற்கு லைக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். கபீர் கான் நினைத்தது போலவே, ஸ்மிருதி மந்தனாவும் இதை பார்த்து உணர்ச்சி வசப்பட்டுள்ளார். இதுகுறித்து கபீர் கானின் பதிவிற்கு கீழ் கமெண்ட் செய்த ஸ்மிருதி மந்தனா, “ அருவில் உள்ள அந்த சிறுமியை நான் கட்டிப்பிடித்து, அவளை உற்சாகப்படுத்தியாக சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ALSO READ: பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை மகளிரணி – இந்திய மகளிரணி அபார வெற்றி
வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா:
2025 ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு, ஸ்மிருந்தி மந்தனா தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறார். நேற்று அதாவது 2025 டிசம்பர் 21ம் தேதி நடைபெற்ற இந்தியா – இலங்கை இடையிலான முதல் டி20 போட்டியில் ஸ்மிருதி மந்தனா, 18 ரன்களை கடந்ததும் மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 4,000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை படைத்தார். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீராங்கனை நியூசிலாந்து ஜாம்பவான் சுசி பேட்ஸ் ஆவார்.