T20 World Cup Champion: 2 ஆண்டுகளில் 6 ஐசிசி கோப்பை.. கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!

Indian Cricket team: கடந்த 2 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி ஒட்டுமொத்தமாக 6 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது. பின்னர், அவரது தலைமையிலான இந்திய அணி 2025ல் சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றது.

T20 World Cup Champion: 2 ஆண்டுகளில் 6 ஐசிசி கோப்பை.. கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!

இந்திய கிரிக்கெட் அணி

Published: 

10 Mar 2026 14:12 PM

 IST

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையை (2026 T20 World Cup) வென்றதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) உலக கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தது. கடந்த சில ஆண்டுகளில், ஆண்கள் கிரிக்கெட்டில் மட்டுமல்ல, மகளிர் கிரிக்கெட் மற்றும் ஜூனியர் கிரிக்கெட்டிலும் இந்திய அணி தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. அதன்படி, அடுத்தடுத்து ஐசிசி கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. தற்போது, ​​உலகில் எந்த கிரிக்கெட் அணியையும் விட, இந்திய அணியே அதிக ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அதாவது, கடந்த 2 ஆண்டுகளில் 6 ஐசிசி கோப்பைகளை வென்றதன் மூலம், இந்திய அணி கெத்துக்காட்டியுள்ளது. இதன் காரணமாகவே இந்தியா கிரிக்கெட்டின் பொருளாதார மையமாக மட்டுமல்லாமல், உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்துள்ளது.

ALSO READ: டி20 உலகக்கோப்பை வெற்றி.. இந்திய அணிக்கு அடித்தது ஜாக்பாட்.. ரூ.131 கோடி பரிசுத் தொகை அறிவித்த பிசிசிஐ..

கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா 6 ஐ.சி.சி கோப்பை:


கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா மொத்தம் 6 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது. பின்னர், அவரது தலைமையிலான இந்திய அணி 2025ல் சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றது. இதனை தொடர்ந்து, நேற்று முன் தினம் அதாவது கடந்த 2026 மார்ச் 8ம் தேதி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி, 2026 டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. ஆண்கள் கிரிக்கெட் அணியைப் போலவே, மகளிர் கிரிக்கெட் அணியும் 2025ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. இந்தியாவின் ஆண்கள் மற்றும் மகளிர் 19 வயதுக்குட்பட்ட அணிகளும் தங்களது பல திறமையை வெளிப்படுத்தியுள்ளன. கடந்த 2025ல் மகளிர் 19 வயதுக்குட்பட்ட அணி 19 வயதுக்குட்பட்ட டி20 உலகக் கோப்பையை வென்றது. அதே நேரத்தில் 2026ல் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணியும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

உலக கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆதிக்கம்:

2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் வென்றது. இதுதான் 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த முதல் ஐசிசி சாம்பியன் பட்டமாகும். 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றதன் மூலம், இந்த வெற்றி தனது ஒருநாள் வடிவத்திலும் தனது ஆதிக்கத்தை என்பதை இந்தியா நிரூபித்தது. அதைத் தொடர்ந்து, 2026 டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா வரலாறு படைத்தது. இந்திய அணி 3 முறை போட்டியை வென்ற முதல் அணியாகவும், கோப்பையை தக்கவைத்த முதல் அணியாகவும் ஆனது.

ALSO READ: சச்சினிடம் 25 நிமிடங்கள் போனில் பேசிய சஞ்சு சாம்சன்.. பார்முக்கு திரும்பியது குறித்து விளக்கம்!

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி, 2025 நவம்பரில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. மகளிர் அணி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது இதுவே முதல் முறையாகும்.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..