Indian Team Schedule: ஐபிஎல் முடிந்த கையோடு அடுத்த 30 நாட்களில் 10 டி20 போட்டி.. வெளியான இந்திய அணியின் அட்டவணை!

India vs Zimbabwe: ஐபிஎல் 2026 சீசன் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி அடுத்த 30 நாட்களில் மொத்தம் 10 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிகள் அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக நடைபெறும்.

Indian Team Schedule: ஐபிஎல் முடிந்த கையோடு அடுத்த 30 நாட்களில் 10 டி20 போட்டி.. வெளியான இந்திய அணியின் அட்டவணை!

இந்திய கிரிக்கெட் அணி

Published: 

01 Apr 2026 18:50 PM

 IST

ஐபிஎல் 2026 சீசன் (IPL 2026) கடந்த 2026 மார்ச் 28ம் தேதி தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கை தினமும் கண்டு ரசித்து வருகின்றனர். இந்தநிலையில், ஐபிஎல் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) அடுத்த 30 நாட்களில் மொத்தம் 10 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிகள் அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக நடைபெறும். அதன்படி, இந்திய அணி வருகின்ற 2026 ஜூன் 26 முதல் 2026 ஜூலை 26 வரை 3 அணிகளுடனும் தலா 10 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில், அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தத் தொடருக்காக இந்திய அணி அயர்லாந்துக்குச் செல்லும். இதைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும். பின்னர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக இந்திய அணி ஜிம்பாப்வேக்குச் செல்லும்.

ALSO READ: இந்திய அணியில் மறுக்கப்படும் வாய்ப்பு.. தேர்வாளர்களை மறைமுகமாக சாடிய முகமது ஷமி!

அயர்லாந்து தொடர்:

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகின்ற 2026 ஜூன் 26ம் தேதி தொடங்குகிறது. இதனை தொடர்ந்து, 2வது போட்டி வருகின்ற 2026 ஜூன் 28ம் தேதி நடைபெறும்.

  • 2026 ஜூன் 26 (வெள்ளிக்கிழமை) – இந்தியா – அயர்லாந்து, முதல் டி20 போட்டி (பெல்ஃபாஸ்ட்)
  • 2026 ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) – இந்தியா – அயர்லாந்து, 2வது டி20 போட்டி (பெல்ஃபாஸ்ட்)

இங்கிலாந்து தொடர்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகின்ற 2026 ஜூலை 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டியானது வருகின்ற 2026 ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும்.

  • 2026 ஜூலை 1 (புதன்கிழமை) – இந்தியா – இங்கிலாந்து – முதல் டி20 போட்டி (டர்ஹாம்)
  • 2026 ஜூலை 4 (சனிக்கிழமை) – இந்தியா – இங்கிலாந்து – 2வது டி20 (மான்செஸ்டர்)
  • 2026 ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) – இந்தியா – இங்கிலாந்து – 3வது டி20 போட்டி (நாட்டிங்ஹாம்)
  • 2026 ஜூலை 9 (வியாழக்கிழமை) – இந்தியா – இங்கிலாந்து – 4வது டி20 போட்டி (பிரிஸ்டல்)
  • 2026 ஜூலை 11 (சனிக்கிழமை) – இந்தியா – இங்கிலாந்து – 5வது டி20 போட்டி (சவுத்தாம்ப்டன்)

ALSO READ: அயர்லாந்து டி20 தொடரில் அறிமுகமா? வைபவ் சூர்யவன்ஷிக்கு விரைவில் இந்திய அணியில் வாய்ப்பு!

ஜிம்பாப்வே தொடர்:


இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2026 ஜூலை 23 அன்று தொடங்குகிறது. இத்தொடரின் இறுதிப் போட்டி 2026 ஜூலை 26 அன்று நடைபெறும். கடைசி இரண்டு டி20 போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறுகிறது.

  • 2026 ஜூலை 23 (வியாழக்கிழமை) – முதல் டி20 போட்டி (ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்)
  • 2026 ஜூலை 25 (சனிக்கிழமை) – 2வது டி20 (ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்)
  • 2026 ஜூலை 26 (ஞாயிற்றுக்கிழமை) – 3வது டி20 (ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்)
Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..