AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா.. விண்வெளி வீரர்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது செயற்கைக்கோள்!

NASA Sending Astronauts To Moon After 53 Years | நிலவு குறித்த ஆய்வுகளில் உலக நாடுகள் மிக தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், சுமார் 53 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மீண்டும் அமெரிக்கா மனிதர்களை நிலவுக்கு அனுப்ப உள்ளது.

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா.. விண்வெளி வீரர்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது செயற்கைக்கோள்!
நிலவுக்கு செல்லும் நாசா விஞ்ஞானிகள்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Apr 2026 21:19 PM IST

அமெரிக்கா, ஏப்ரல் 01 : உலக நாடுகள் நிலவு குறித்த ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக கடந்த நூற்றாண்டில் மட்டும் அமெரிக்காவும் (America), ரஷ்யாவும் (Russia) போட்டி போட்டுக்கொண்டு நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டன. இதற்காக தொடர்ச்சியாக செயற்கைக்கோள்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆனால், சில காலங்களுக்கு பிறகு இரு நாடுகளும் நிலவு தொடர்பான தங்களது ஆய்வுகளை கைவிட்டுவிட்டன. இந்த நிலையில், அரை நூற்றாண்டுக்கு பிறகு அதாவது 50 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (ஏப்ரல் 02, 2026) மனிதர்களை, அமெரிக்கா நிலவுக்கு அனுப்ப உள்ளது.

பயிற்சி மையாமாக நிலவை பயன்படுத்த திட்டமிடும் அமெரிக்கா

நிலவில் உள்ள கனிம வளங்களை எப்படி பயன்படுத்துவது, வரும் காலத்தில் மனிதர்களை எவ்வாறு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவது என்பதை சோதனை செய்ய நிலவை ஒரு  பயிற்சி மையமாக பயன்படுத்திக்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவின் நாசா (NASA – National Aeronautics and Space Administration) விண்வெளி மையம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ் 2 என்ற திட்டத்தை சோதனை செய்து வருகிறது.

இதையும் படிங்க : “இந்திய மக்களுக்கு நன்றி”.. இஸ்ரேல் மீது ஏவிய ஏவுகணைகள் மூலம் உலக நாட்டு மக்களுக்கு ஈரான் நன்றி!

நாசாவுடன் கைகோர்த்துள்ள மிகப்பெரிய நிறுவனங்கள்

அமெரிக்காவின் இந்த திட்டத்தை நிறைவேற்ற எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஜெப் பெசோஸின் புளூ ஆர்ஜின் ஆகிய நிறுவனங்கள் நாசா உடன் கைகோர்த்துள்ளன. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏற்கனவே நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது நாசா உடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்த முயற்சியின் முக்கிய பகுதியாக தான் நாளை மனிதர்களை அமெரிக்கா நிலவுக்கு அனுப்ப உள்ளது.

இதையும் படிங்க : மேற்கு ஆசியா போர் குறித்து ஆலோசித்த பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப்.. எலாஸ் மஸ்க் இருந்தாரா? வெளியான தகவல்

4 வீரர்களை நிலவுக்கு அனுப்பும்  அமெரிக்கா

அமெரிக்கா நாளை நிகழ்த்த உள்ள இந்த சோதனையில் மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களும், ஒரு கனடா விண்வெளி வீரரும் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளனர். இதன் மூலம் அமெரிக்கா சுமார் 53 ஆண்டுகள் கழித்து நிலவுக்கு மனிதர்களை அனுப்ப உள்ளது. நாசாவின் ஓரியன் விண்கலம் மற்றும் உலகின் சக்திவாய்ந்த எஸ்.எல்.எஸ் ராக்கெட் மூலம் இந்த விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us