Saina Nehwal Retirement: ஒலிம்பிக்கில் பதக்கம்.. அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. ஓய்வை அறிவித்தார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
Indian Badminton Saina Nehwal Retirement: ஒலிம்பிக் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்தான். 2015ம் ஆண்டு உலக தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தார். 2008ம் ஆண்டு BWF உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்றார். 2010 மற்றும் 2018ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் தங்க பதக்கங்களையும் வென்றார்.

சாய்னா நேவால்
ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் (Saina Nehwal), இன்று அதாவது 2026 ஜனவரி 20ம் தேதி தனது ஓய்வை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு முதல் பேட்மிண்டன் (Badminton) விளையாட்டிலிருந்து விலகி இருந்தபோதிலும், சாய்னா ஒருபோதும் பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறுவதாக முறையாக அறிவிக்கவில்லை. இந்தநிலையில், தனது ஓய்வு குறித்து பேசிய சாய்னா நேவால், ஒரு பாட்காஸ்டில் தனது உடல் ஒத்துழைக்கவில்லை என்று குறித்து முக்கிய முடிவை எடுத்தார்.
ஓய்வு குறித்து சாய்னா என்ன சொன்னார்?
Indian badminton legend Saina Nehwal confirms her retirement from competitive badminton, saying her body can no longer handle the physical demands of the sport.#sainanehwal #badminton pic.twitter.com/TKTa34jGXk
— BUZZ BEE (@buzzbee_IN) January 20, 2026
முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனை சாய்னா நேவால் ஒரு பாட்காஸ்டில், “நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு விளையாடுவதை விட்டுவிட்டேன். நான் என் விருப்பப்படி விளையாட ஆரம்பித்தேன். என் விருப்பப்படி ஓய்வு பெறுவேன் என்று உணர்ந்தேன். எனவே, அதை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் இனி விளையாட முடியாவிட்டால், அவ்வளவுதான், அவ்வளவுதான்.
ஓய்வை அறிவிப்பது அவ்வளவு பெரிய விஷயமாக நான் நினைக்கவில்லை. போதுமான அளவு கடினமாக விளையாட முடியாததால், எனது நேரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன், என முழங்கால் முன்பு இருந்த அதே அளவு மன அழுத்தத்தை கையாள முடியவில்லை. உலகின் சிறந்த வீரராக நீங்கள் ஒரு நாளைக்கு எட்டு முதல் என்பது மணிநேரம் பயிற்சி பெறுகிறீர்கள். ஆனால், இப்போது என் முழங்கால் 1 அல்லது 2 இரண்டு மணிநேரத்திற்குள் செயலிழந்துவிடும். அது வீங்கிவிடும், பின்னர் நடப்பதே மிகவும் கடினமாகிவிடும். அதனால் போதும் என்று நினைத்தேன். இனி என்னால் விளையாட முடியாது.” என்றார்.
சாய்னா நேவாலின் சாதனைகள்:
ஒலிம்பிக் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்தான். 2015ம் ஆண்டு உலக தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தார். 2008ம் ஆண்டு BWF உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்றார். 2010 மற்றும் 2018ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் தங்க பதக்கங்களையும் வென்றார். இதன்மூலம், இந்த விளையாட்டுகளில் 2 ஒற்றையர் தங்க பதக்கங்களை வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இவரது சிறந்த விளையாட்டு திறனுக்காக 2009ம் ஆண்டு அர்ஜூனா விருது, 2010ம் ஆண்டு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா, 2010ம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் 2016ம் ஆண்டு பத்ம பூஷண் போன்ற சிவில் மற்றும் விளையாட்டு விருதுகளை மத்திய அரசிடம் இருந்து பெற்றார்.