IndWvsSLW: இலங்கைக்கு எதிராக இந்திய மகளிரணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்திய அணி மகளிரணி 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது.  இந்தப் போட்டியில் இலங்கை அணி 12 ஓவர்களில் இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது. மேலும் 3 -0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

IndWvsSLW: இலங்கைக்கு எதிராக இந்திய மகளிரணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

Slwvsindw 3rd T20

Updated On: 

26 Dec 2025 22:01 PM

 IST

இந்தியா – இலங்கை (Sri Lanka) மகளிர் அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரின் மூன்றாவது போட்டி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டிசம்பர் 26, 2025 அன்று நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்திய மகளிர் அணி (India Women Cricket Team) முதல் இரண்டு போட்டிகளையும் வென்று, 2–0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், மூன்றாவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால், தொடரை கைப்பற்றும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில் முதலில் பேட் செய்த இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு வெறும் 112 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்தியாவுக்கு எளிய இலக்கு

முதல் இரண்டு போட்டிகளிலும், இலங்கை மகளிரணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் இந்திய மைதானங்களில் இந்திய அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க முடியாமல் இலங்கை தவித்தது. இதன் விளைவாக, இந்திய மகளிரணி இரண்டாம் இன்னிங்ஸில் எளிதாக இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இதையும் படிக்க : 2027 ODI World Cup: 2027 உலகக் கோப்பையில் விளையாடுவாரா கோலி..? பயிற்சியாளர் கொடுத்த ஸ்வீட் அப்டேட்!

மூன்றாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறவில்லை என்றால், தொடரை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும். எனவே, இந்தப் போட்டி இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமாக கருதப்பட்டது. இந்த நிலையில், தான் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து இந்த போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்யும் நிலை இலங்கை மகளிரணிக்கு ஏற்பட்டது.

இந்திய அணி அபார வெற்றி

 

முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் சார்பில் ஹாசினி பெரேரா மற்றும் சாமரி அத்தபட்டு களமிறங்கினர். இந்த நிலையில் சாமரி அத்தப்பட்டு 3 ரன்கள் மட்டுமே எடுத்து தீப்தி சர்மா பந்தில் வெளியேறினார். அவருக்கு அடுத்து வந்த ஹர்ஷிதா 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரேனுகா சிங் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து வீரர்களும் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்கள் முடிவில் 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடரை வென்ற இந்தியா

இதையும் படிக்க : T20 World Cup 2026: இந்தியா முதல் இலங்கை வரை.. 2026 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் விவரம்!

இதனையடுத்து இந்திய அணி 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது. இந்த நிலையில் 13.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. இதனையடுத்து இந்திய மகளிரணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்று தொடரையும் கைப்பற்றியது.

சமந்தாவுக்காக ஏர்போர்ட்டில் காதலுடன் காத்திருந்த ராஜ்..... வைரலாகும் வீடியோ
இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனையுடன் பாக்ஸ் ஆபிஸ் அதிர வைத்த துரந்தர் படம்..
அதிகமாக சாப்பிட்ட வருங்கால மனைவி.. நஷ்ட ஈடு வழங்க தொடுத்த வழக்கு..
ஜப்பானில் கடைப்பிடிக்கப்படும் மெட்டபாலிக் லா.. அப்படி என்ன சட்டம் இது?