Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.. தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..

Fishermen Arrest: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள், இன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, அந்த 10 மீனவர்களையும் கைது செய்தனர்.

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.. தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 23 Dec 2025 09:47 AM IST

ராமேஸ்வரம், டிசம்பர் 23, 2025: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி பத்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள், குறிப்பாக ராமேஸ்வரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மீன்பிடிக்கச் செல்லக்கூடியவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து, அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்து வருவது ஒரு வாடிக்கையாக மாறியுள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என தொடர்ந்து மக்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மீனவர்களின் உபகரணங்களையும் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்கின்றனர். ஒரு சில சமயங்களில் அவர்களது படகுகள் சேதப்படுத்தப்படுவதும் நடைபெறுகிறது. இந்தச் சூழல் தொடர்ந்து பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகளின் காரணமாக, கடலுக்குச் செல்லும் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: இன்ஸ்பெக்டர் வீட்டில் இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த போலீஸ்.. அதிரடி கைது!

ராமேஸ்வர மீனவர்கள் 10 பேர் கைது:

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள், டிசம்பர் 23, 2025 தேதியான இன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, அந்த 10 மீனவர்களையும் கைது செய்தனர்.

மேலும், அவர்களது படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்.. ஆலோசிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?

தொடரும் இலங்கை கடற்படைகயின் அட்டூழியம்:

மீனவர்களை கைது செய்வது ஒரு வாடிக்கையாக மாறி வருவதால், அவர்களது வாழ்வாதாரம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவும் தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. கடந்த மாதம் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 35 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதோடு, அவர்களது நான்கு படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுபோன்ற மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படை இந்த நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், இதற்கு மாநில மற்றும் மத்திய அரசுகள் முன்வந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் மீனவ சமுதாயத்தினர் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைத்து வருகின்றனர்.