AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

India vs Zimbabwe Women 1st T20 : தீப்தி, பிரசாத் நிதான ஆட்டம்.. இந்திய மகளிர் அணி வெற்றி!

IND-W vs ZIM-W1st T20 Highlights : முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. 115 என்ற இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 15.4 ஓவர்களில் வெற்றியை ருசித்தது.

C Murugadoss
C Murugadoss | Updated On: 16 Oct 2026 22:56 PM IST
Share
India vs Zimbabwe Women 1st T20 : தீப்தி, பிரசாத் நிதான ஆட்டம்.. இந்திய மகளிர் அணி வெற்றி!
Ind W 1st T20 Zim

இந்திய மகளிர் அணியும் ஜிம்பாப்வே மகளிர் அணியும் முதல் முறையாக இருதரப்பு சர்வதேசத் தொடரில் மோதுகின்றன. இந்தத் தொடர் மூன்று டி20 போட்டிகளுடன் தொடங்குகிறது. ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் அக்டோபர் 16, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து, வதோதராவில் அக்டோபர் 23, 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறும். இந்தத் தொடரின் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், ராய்ப்பூர் மைதானம் முதல் முறையாக ஒரு மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது. முதல் டி20 போட்டி இரவு 7 மணிக்குத் தொடங்கும். இந்நிகழ்வையொட்டி, பெண் பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என சத்தீஸ்கர் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதன் விவரங்களை பார்க்கலாம்

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 16 Oct 2026 10:08 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: தீப்தி, பிரசாத் நிதான ஆட்டம்.. இந்திய மகளிர் அணி வெற்றி!

    ஜிம்பாப்வே மகளிர் அணி நிர்ணயித்த 115 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து 4 விக்கெட்களை இழந்தது. இருப்பினும், தீப்தி சர்மாவின் 49 ரன்கள் மற்றும் நிக்கி பிரசாத்தின் 39 ரன்களால் இந்திய மகளிர் அணி 15.4 ஓவர்களில் வெற்றியை ருசித்தது.

  • 16 Oct 2026 09:58 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: 49 ரன்களில் அவுட்டான தீப்தி சர்மா.. அரைசதம் மிஸ்!

    அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்போது இந்திய அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது.

  • 16 Oct 2026 09:38 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: 9 ஓவர்களில் 59 ரன்கள்.. தீப்தி, பிரசாத் நிதான ஆட்டம்!

    இந்திய மகளிர் அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்துள்ளது. தீப்தி சர்மா மற்றும் பிரசாத் நிதானத்துடன் ரன்களை எடுத்து வருகின்றனர்.

  • 16 Oct 2026 09:19 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: 5 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே.. 4 விக்கெட்டை இழந்து திணறும் இந்திய மகளிர்!

    ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிராக 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 27 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

  • 16 Oct 2026 09:07 PM (IST)

    இந்திய அணிக்கு 3 விக்கெட் இழப்பு! ஹர்மன்பிரீத் கவுர் அவுட்

    இந்தியா – ஜிம்பாப்வே மகளிர் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டியில், இந்திய அணி தனது 3-வது விக்கெட்டை இழந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டமிழந்ததால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

  • 16 Oct 2026 09:04 PM (IST)

    முதல் ஓவரிலேயே அவுட்டான ஸ்மிருதி மந்தனா!

    இந்தியா – ஜிம்பாப்வே மகளிர் அணிகள் இடையிலான டி20 போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். நியாஷா குவான்சுரா வீசிய 1.1-வது பந்தில், பீல்டரிடம் கேட்ச் கொடுத்து மந்தனா வெளியேறினார்.

  • 16 Oct 2026 08:40 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: 20 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே.. இலக்கை துரத்துமா இந்திய மகளிர்..?

    இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.

  • 16 Oct 2026 08:17 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: 42 ரன்களில் தொடக்க வீரர் அவுட்.. இந்தியா பக்கம் அடிக்கும் காற்று!

    ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கெலீஸ் நடால்வு 44 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

  • 16 Oct 2026 07:58 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: முடிந்த 11 ஓவர்கள்.. 2 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே!

    இந்திய மகளிர் அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் ஜிம்பாப்வே மகளிர் அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.

  • 16 Oct 2026 07:41 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: 8 ஓவர்களில் 46 ரன்கள்.. வலுவான நிலையில் ஜிம்பாப்வே மகளிர்!

    இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஜிம்பாப்வே மகளிர் அணி 8 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.

  • 16 Oct 2026 07:16 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: முதல் விக்கெட்டை இழந்த ஜிம்பாப்வே.. விக்கெட் எடுக்க தொடங்கும் இந்திய மகளிர்!

    இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 10 ரன்கள் எடுத்துள்ள நிலையில் ஜிம்பாப்வே அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. இந்த விக்கெட்டை இந்திய பந்துவீச்சாளர் கிராந்தி கவுட் எடுத்தார்.

  • 16 Oct 2026 06:42 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: ஜிம்பாப்வே மகளிர் அணியின் பிளேயிங் லெவன்!

    நியாஷா குவான்சுரா, சிப்போ முகேரி-திரிபானோ, கெலிஸ் நத்லோவ், பிரியமான பிசா, ஜோசபின் நகோமோ (கேப்டன்), மாடஸ்டர் முபச்சிக்வா (விக்கெட் கீப்பர்), மிச்செல் மவுங்கா, பிரான்சிஸ்கா சிப்பரே, ஒலிண்டர் சாரே, டெண்டாய் மகுஷா, ஷார்னே மேயர்ஸ்

  • 16 Oct 2026 06:40 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: இந்திய மகளிர் அணியின் பிளேயிங் லெவன்..!

    ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), அனுஷ்கா ஷர்மா, ஹர்மன்ப்ரீத் கவுர், நிகி பிரசாத், ரிச்சா கோஷ்(விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, ஸ்ரீ சரணி, அருந்ததி ரெட்டி, நந்தனி ஷர்மா, கிராந்தி கவுட்

  • 16 Oct 2026 06:34 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: முதலில் பந்துவீசும் இந்திய மகளிர்.. பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்துமா ஜிம்பாப்வே..?

    ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

  • 16 Oct 2026 06:00 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: ஜிம்பாப்வே அணியின் முழு விவரம்..!

    கெல்லிஸ் நத்லோவ், பிலாவாட் பிசா, சிப்போ முகேரி-திரிபனோ, சிட்சா துருரு (கீப்பர்), நியாஷா குவான்சுரா, ஜோசபின் நகோமோ (கேப்டன்), மாடஸ்டர் முபச்சிக்வா, ஷார்னே மேயர்ஸ், லோரெய்ன் ஃபிரி, பிரான்செஸ்கா சிப்ரேலியோ, குட்ஸாம், மிச்செல் மவுங்கா, தென்டை மகுஷா

  • 16 Oct 2026 05:45 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: இந்திய மகளிர் அணியின் முழு விவரம்..!

    ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), குணாலன் கமாலினி, தீப்தி சர்மா, அருந்ததி ரெட்டி, மின்னு மணி, ஸ்ரீ சரணி, நந்தனி ஷர்மா, கிராந்தி கவுட், அனுஷ்கா சர்மா, ஜிந்திமனி பிரசாத் கலிதா

  • 16 Oct 2026 05:30 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: இந்தியா W – ஜிம்பாப்வே W இடையேயான முதல் டி20ஐ மொபைலில் நேரலைப் போட்டிகளை எங்கே பார்ப்பது?

    இந்தியா W – ஜிம்பாப்வே W இடையேயான முதல் டி20ஐ மொபைல் அல்லது ஆன்லைனில் போட்டியைப் பார்க்க விரும்பும் ரசிகர்கள், ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்தில் நேரடியாக காணலாம். மேலும், கொடுக்கப்பட்ட தகவலின்படி, இந்தப் போட்டி டிடி ஸ்போர்ட்ஸிலும் இலவசமாகக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

  • 16 Oct 2026 05:15 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: IND-W vs ZIM-W தொலைக்காட்சியில் நேரலையாக எங்கே பார்க்கலாம்?

    இந்தியா மகளிர் மற்றும் ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையாக ஒளிபரப்பப்படும். பார்வையாளர்கள் இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸின் பிரத்யேக சேனல்களில் காணலாம்.

  • 16 Oct 2026 05:00 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: இந்தியா மகளிர் -ஜிம்பாப்வே மகளிர் போட்டி எங்கு நடைபெறும்?

    இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. அனுஷ்கா ஷர்மா மற்றும் நிக்கி பிரசாத் போன்ற இளம் வீராங்கனைகளுக்கும் இந்தப் போட்டியில் தங்களது முத்திரையைப் பதிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

  • 16 Oct 2026 04:42 PM (IST)

    IND-W vs ZIM-W Live Score: இந்திய மகளிர் – ஜிம்பாப்வே மகளிர் இடையேயான முதல் டி20 போட்டி எப்போது?

    இந்திய மகளிர் அணி, ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று அதாவது 2026 அக்டோபர் 16ம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Published On - Oct 16,2026 4:30 PM

Follow Us