India vs Sri Lanka, Asian Games Semi-Final Updates : இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா.. இறுதிப்போட்டிக்கு தகுதி
IND vs SL Asian Games Semi Final Highlights : 2026 ஆசிய விளையாட்டு போட்டியின் 2வது அரையிறுதியில் இலங்கையை எதிர்கொள்ளும் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்போது, இஷான் கிஷனின் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 169 ரன்கள் எடுத்தது. பின்னர் பந்துவீச்சில் அடுத்தடுத்து இலங்கை விக்கெட்டுகளை பறிகொடுத்து 45 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், இறுதிப்போட்டியில் இந்திய அணி வருகின்ற 2026 அக்டோபர் 3ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் டி20 தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று அக்டோபர் 1 நடைபெறுகின்றன. முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் வங்கதேசமும் மோதுகின்றன, அதே நேரத்தில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும், அதே நேரத்தில் தோல்வியடையும் அணிகள் வெண்கலப் பதக்கத்திற்காக அக்டோபர் 3 அன்று மோதும். பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதிப் போட்டி இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்குத் தொடங்கியது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
LIVE NEWS & UPDATES
-
பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் இந்தியா
இந்தியா பெரும் வெற்றி பெற்று, பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டிக்குத் தயாராகியுள்ளது.
-
இந்தியா வெற்றி பெற்றது
இந்தியா வெற்றி பெற்றது
-
சரியும் விக்கெட்டுகள்.. 8 விக்கெட் இழந்த இலங்கை!
9.3 ஓவர்களுக்கு இலங்கை 8 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் உள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுத்து வருகின்றனர்.
-
7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை
இலங்கை 6.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்தது.
-
இலங்கையில் 6வது விக்கெட் சரிவு
இலங்கை தனது 6வது விக்கெட்டை இழந்தது. தொடக்கத்தில் தவித்து வருகிறது இலங்கை
-
அதிரடி காட்டும் இந்திய பந்துவீச்சாளர்கள்
பும்ரா முதல் ஓவரிலேயே இலங்கை அணிக்கு எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்தார். அவர் வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து வருகின்றன.
-
3.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது
இலங்கை 3.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா 2 விக்கெட்டுகளையும், அக்சர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர், ஒரு ரன்-அவுட் பதிவானது.
-
IND vs SL Semi Final: இஷான் கிஷன் அதிரடி அரைசதம்.. இலங்கை அணி 170 ரன்கள் இலக்கு
2026 ஆசிய விளையாட்டு போட்டியின் 2வது அரையிறுதியில் இந்தியாவும், இலங்கை அணியும் இன்று அதாவது 2026 அக்டோபர் 1ம் தேதி மோதி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.
-
IND vs SL Semi Final: அரைசதம் அடித்த இஷான் கிஷன்.. 150 ரன்களை தொடுமா இந்தியா?
இலங்கை அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தற்போது, இந்திய அணி 150 ரன்களை நோக்கி பயணித்து வருகிறது.
-
IND vs SL Semi Final: கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்.. 4 விக்கெட்களை இழந்த இந்தியா!
இலங்கை அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி 87 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து சற்று தடுமாறி வருகிறது. இருப்பினும், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி மறுமுனையில் ரன் குவித்து வருகிறார்.
-
IND vs SL Semi Final: சூர்யவன்ஷி அதிரடி ஆட்டம்.. 5 ஓவர்களில் 50 ரன்களை கடந்த இந்தியா!
இலங்கை அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி சார்பில் பேட்டிங்கில் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இதன் காரணமாக, இந்திய அணி 5 ஓவர்களில் 50 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
-
IND vs SL Semi Final: அவுட்டான அபிஷேக் சர்மா.. 7 ரன்னில் வெளியேறிய சோகம்!
2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு எதிரான அரையிறுதியில் அதிரடியாக விளையாட முயற்சித்த இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
-
IND vs SL Semi Final: இலங்கை அணியின் பிளேயிங் லெவன்..!
லசித் குரூஸ்புள்ளே, சினெத் ஜயவர்தன, சோஹான் டி லிவேரா (விக்கெட் கீப்பர்), அஷேன் பண்டார, சஹான் ஆராச்சிகே(கேப்டன்), நுவனிது பெர்னாண்டோ, சாமிக்க கருணாரத்ன, வனுஜா சஹான், விஜயகாந்த் வியாஸ்காந்த், தரிந்து ரத்நாயக்க, பினுர பெர்னாண்டோ
-
இந்திய ப்ளேயிங் லெவன் என்ன?
இந்திய ப்ளேயிங் லெவன்: வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), இஷான் கிஷன், திலக் வர்மா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா.
-
இந்தியா முதலில் பேட்டிங் செய்யும்.
ஆடவர் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்யும். டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சைத் தீர்மானித்தது. இது 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இரண்டாவது ஆடவர் கிரிக்கெட் அரையிறுதி ஆட்டமாகும்.
-
India vs Sri Lanka: இன்னும் சற்று நேரத்தில் டாஸ்
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் டி20 தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கான டாஸ் இன்னும் சற்று நேரத்தில் போடப்படவுள்ளது
-
இந்தியாவும் இலங்கையும் 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவும் இலங்கையும் 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்தியா 21 போட்டிகளிலும், இலங்கை 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றன. இரண்டு போட்டிகள் சமநிலையில் முடிவடைந்த நிலையில், ஒரு போட்டியின் முடிவு தீர்மானிக்கப்படவில்லை.
-
India vs Sri Lanka: காலை 10:30 மணிக்கு போட்டி
திட்டமிட்டபடி காலை 10:30 மணிக்கு போட்டி தொடங்கும். மழை காரணமாக இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான காலிறுதிப் போட்டி கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, இரு அணிகளும் தங்களது சிறந்த அணித் தரவரிசையின் அடிப்படையில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
-
இந்தியாவும் இலங்கையும் மோதவுள்ளன
ஆடவர் கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதவுள்ளன. வானிலை சாதகமாகவும், மைதானம் வறண்டும் இருப்பதால், போட்டி முழுமையாக நடைபெற வாய்ப்புள்ளது
Published On - Oct 01,2026 8:00 AM