IND vs SA 1st T20: ஒருநாள் போட்டிக்கு பிறகு.. டி20யில் மோதும் இந்தியா-தென்னாப்பிரிக்கா.. முதல் டி20 போட்டியை எப்போது, எங்கு காணலாம்?

IND vs SA 1st T20I Live Streaming: டெஸ்ட் தொடரை 0-2 என இழந்த பிறகு, இந்திய அணி ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வென்றது. இப்போது, ​​சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை இந்திய அணி டி20 தொடரை வெல்ல வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

IND vs SA 1st T20: ஒருநாள் போட்டிக்கு பிறகு.. டி20யில் மோதும் இந்தியா-தென்னாப்பிரிக்கா.. முதல் டி20 போட்டியை எப்போது, எங்கு காணலாம்?

சஞ்சு சாம்சன் - ஐடன் மார்க்கரம்

Published: 

08 Dec 2025 14:49 PM

 IST

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்குப் பிறகு, இந்திய அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் அடுத்ததாக டி20 தொடரில் மோதுகிறது. 2026ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை (2026 T20 World Cup) கருத்தில் கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமானது. முன்னதாக, கடந்த 2024ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா (India vs South Africa) அணிகளே இறுதிப்போட்டியில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி நாளை அதாவது 2025 டிசம்பர் 9ம் தேதி நடைபெறுகிறது.

டெஸ்ட் தொடரை 0-2 என இழந்த பிறகு, இந்திய அணி ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வென்றது. இப்போது, ​​சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை இந்திய அணி டி20 தொடரை வெல்ல வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான முதல் டி20 போட்டியை ரசிகர்கள் எப்போது, ​​எங்கே, எப்படி நேரலையில் பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஜெய்ஸ்வால் சதம்.. ரோஹித், விராட் அரைசதம்.. வெற்றியுடன் தொடரை வென்ற இந்தியா!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி எப்போது, எங்கு நடைபெறும்?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 2025 டிசம்பர் 9ம் தேதியான நாளை கட்டாக்கில் நடைபெற உள்ளது.

முதல் டி20 போட்டி எந்த நேரத்தில் தொடங்குகிறது?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. போட்டி தொடங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்னதாக டாஸ் அதாவது மாலை 6:30 மணிக்கு நடைபெறும்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டியை எந்த டிவி சேனல், ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் காணலாம்.  ஓடிடி தளத்தில் பார்க்க விரும்பும் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரடியாக காணலாம்.

ALSO READ: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா… சிம்மாசலம் கோவிலில் விராட் கோலி சிறப்பு வழிபாடு

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 அணிகள்:

இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் சிங், குல்தீப் சிங்.

தென்னாப்பிரிக்கா அணி:

ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டெவால்ட் ப்ரூவிஸ், டோனி டி ஜோர்ஜி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், மார்கோ ஜான்சன், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டொனோவன் ஃபெரீரா (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், க்யூங்ஹாவ்ட்மேன், ஓட்னெய்ல், ஓட்னெய்ல் என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை