Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா… சிம்மாசலம் கோவிலில் விராட் கோலி சிறப்பு வழிபாடு

Kohli Visits Simhachalam Temple : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றியது. இந்த போட்டியில் தொடர் நாயகன் விருதை வென்ற விராட் கோலி, சிம்மாசலத்தில் உள்ள வராக லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா…  சிம்மாசலம் கோவிலில் விராட் கோலி சிறப்பு வழிபாடு
சிம்மாசலம் கோவிலில் விராட் கோலி சிறப்பு வழிபாடு
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Dec 2025 19:11 PM IST

மூன்று போட்டிகள் கொண்ட இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரை 2 – 1 என்ற முறையில் இந்தியா கைப்பற்றியது. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி (Virat Kohli) விசாகப்பட்டணத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிம்மாசலம் தேவேஸ்தானத்தில் வராக லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்தார். இந்த தொடரில் விளையாடி விராட் கோலி, மொத்தம் 302 ரன்கள் அடித்து மேன் ஆஃப் தி சீரிஸ் விருதை வென்றார். இந்த தொடரில் அவர் பல சாதனைகளை படைத்தார். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (Sachin Tendulkar) சாதனையை முறியடித்து வரலாறு படத்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் சிம்மாசலம் தேவஸ்தான கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

சிம்மாசலம் வராக லட்சுமி நரசிம்மரை வழிபட்ட விராட் கோலி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்ற அடுத்த நாளான டிசம்பர் 8, 2025 அன்று விராட் கோலி, வராக லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலான சிம்மாசலத்தைச் சென்று வழிபாடு செய்தார். தனது கிரிக்கெட் பயணத்தில் முக்கியமான இந்த தருணத்தில் கோவிலுக்கு சென்றது குறித்து அவர் நெருங்கியவர்களிடம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விராட் கோலி தரிசனம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிக்க : IND vs SA 3rd ODI: ஜெய்ஸ்வால் சதம்.. ரோஹித், விராட் அரைசதம்.. வெற்றியுடன் தொடரை வென்ற இந்தியா!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் கோலி சிறந்த ஃபார்மை வெளிப்படுத்தினார். இந்த தொடரில் இரண்டு சதங்கள், ஒரு அரைசதம் என மூன்று போட்டிகளிலும் சேர்த்து, 302 ரன்கள் குவித்தார். குறிப்பாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முந்தைய தொடரில் அடுத்தடுத்து 2 முறை டக் அவுட் ஆன நிலையில், அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் அவர் ரசிகர்களால் கோட் என அழைக்கப்படுகிறார் என்பதை மேலும் ஒருவரை நிரூபித்தார்.

கோவிலில் விராட் கோலி வழிபட்ட வீடியோ

 

இதையும் படிக்க : Jaiswal Century: ஒருநாள் வரலாற்றில் முதல் சதம்.. முத்திரை பதித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

இறுதி ஒருநாள் போட்டியில் 271 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. குறிப்பாக துவக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவருடன் களமிறங்கிய ரோகித் சர்மாவும் 75 ரன்களைக் குவித்தார். இந்த நிலையில் இந்திய அணிக்கு வலுவான துவக்கம் கிடைத்த நிலையில், அடுத்து களமிறங்கிய விராட் கோலி 65 ரன்கள் குவித்த நிலையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனால் அவரால் இந்த போட்டியில் சதம் அடிக்க முடியாமல் போனது. ஒருவேளை தென்னாப்பிரிக்கா 300 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் விராட் கோலி இந்த போட்டியிலும் சதமடித்திருப்பார்.

இந்தப் போட்டியில் அவர் தொடர் நாயகன் விருதை வென்றார். தொடர் முடிந்த பின் கோலி அளித்த பேட்டியில், இந்த போட்டியில் நான் விளையாடிய முறை எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த அளவுக்கு நான் ஆடவில்லை. இந்த நிலையில் நான் மனதளவில் சுதந்திரமாக உணர்கிறேன். எனது ஆட்டத்தை மேலும் மேம்படுத்த ஆவலாக இருக்கிறேன்.