India vs England Test Series 2025: இன்னும் 4 நாட்களில் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்! போட்டியை எங்கு, எப்போது காணலாம்..?

Shubman Gill Leads India in England: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் 2025 ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது. புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இளம் இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெற போராடும். ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்குப் பதிலாக சோனி ஸ்போர்ட்ஸ் இந்த தொடரை ஒளிபரப்பு செய்யும். ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஓய்வு பெற்ற பின் இந்திய அணியின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

India vs England Test Series 2025: இன்னும் 4 நாட்களில் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்! போட்டியை எங்கு, எப்போது காணலாம்..?

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

Published: 

16 Jun 2025 11:22 AM

2025 சாம்பியன்ஸ் டிராபி (2025 Champions Trophy) வெற்றிக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் (India vs England Test Series) மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி தொடங்குகிறது. ரவிசந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் (Shubman Gill) நியமிக்கப்பட்டுள்ளார். கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் இளம் அணியுடன் முதல் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தநிலையில், இந்தியா – இங்கிலாந்து இடையிலான நேரடி ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் தளம் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. இந்த முறை ரசிகர்கள் இந்த தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரடியாகப் பார்க்க முடியாது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரடி ஒளிபரப்பு இல்லையா..?

ஐபிஎல் 2025 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெர்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பட்டது. இப்போது, இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இந்த தளம் மாறிவிட்டது. இப்போது இந்த டெஸ்ட் தொடர் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மண்ணை தவிர்த்து, வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை சோனி நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தியா – இங்கிலாந்து இடையிலான தொடரின் அனைத்து போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு மட்டும் ரசிகர்களுக்காக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக காணலாம்.

சோனி லைவ்:

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி அட்டவணை:

  1. முதல் டெஸ்ட்: 2025 ஜூன் 20, ஹெடிங்லி, லீட்ஸ்
  2. 2வது டெஸ்ட்: 2025 ஜூலை 2, எட்ஜ்பாஸ்டன்
  3. 3வது டெஸ்ட்: 2025 ஜூலை 10, லண்டனின் லார்ட்ஸில்
  4. 4வது டெஸ்ட்: 2025 ஜூலை 23, மான்செஸ்டர்
  5. 5வது டெஸ்ட்: 2025 ஜூலை 31, கென்னிங்டன் ஓவல்

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி சாதிக்குமா..?

கே.எல்.ராகுல், பும்ரா, ஜடேஜா போன்ற அனுபவ வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும், டெஸ்ட் அணியை வழிநடத்தும் முதல் வாய்ப்பு சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் வென்றது கிடையாது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய இளம் படை எப்படியாவது இங்கிலாந்து மண்ணில் சாதிக்க முயலும். இதையேதான், இந்திய ரசிகர்களும் விரும்புகின்றனர். அதன்படி, இளம் கேப்டன் சுப்மன் கில் இங்கிலாந்து அணியை இங்கிலாந்தின் சொந்த மண்ணில் எவ்வாறு வியூகம் வகுத்து சவால் விடுவார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

Related Stories