AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

India vs Australia Women’s T20 WC Highlights : இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபரா வெற்றி

India vs Australia Women’s T20 World Cup 2026 Highlights: 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி தனது கடைசி குரூப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்கு முன்னேற இந்தியா இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

C Murugadoss
C Murugadoss | Updated On: 28 Jun 2026 22:24 PM IST
Share
India vs Australia Women’s T20 WC Highlights :  இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபரா வெற்றி
ஆஸ்திரேலியா அபார வெற்றி

2026 மகளிர் டி20 உலகக் கோப்பையின் கடைசி குரூப் போட்டியில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இந்தச் சுற்றில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மறுபுறம், ஆஸ்திரேலியா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அரையிறுதிப் போட்டியைப் பொறுத்தவரை, இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக, ஏற்கனவே ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ள இந்திய அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிப் போட்டியில் நீடிக்க முடியும். இல்லையெனில், அது அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறிவிடும்.

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 Jun 2026 10:18 PM (IST)

    6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

    இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

  • 28 Jun 2026 10:05 PM (IST)

    17 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 154/3

    17 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 154 ரன்களை எடுத்துள்ளது. இதனையடுத்து அந்த அணி வெற்றி பெற 18 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும்.

  • 28 Jun 2026 09:47 PM (IST)

    13 ஓவர்களில் ஆஸ்ரேலியா 102/3

    13 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 102 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

  • 28 Jun 2026 09:33 PM (IST)

    3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா. 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.

  • 28 Jun 2026 08:58 PM (IST)

    ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி

    ஆஸ்திரேலியாவின் ஜார்ஜியா வோல், ரேணுகா சிங் வீசிய முதல் ஓவரில் 2வது பந்திலேயே எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

  • 28 Jun 2026 08:37 PM (IST)

    ஆஸ்திரேலியாவுக்கு 171 ரன்கள் இலக்கு

    20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கவுள்ளது.

  • 28 Jun 2026 08:31 PM (IST)

    மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய இந்திய பேட்ஸ்மென்கள்

    14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு இந்தியா 102 ரன்களை எட்டியது. ஸ்மிருதி மந்தனா ரன்-அவுட் ஆன பிறகு, ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் அணியின் ஆட்டத்தை நிலைப்படுத்தினர். 14-வது ஓவரில், சோஃபி மோலினக்ஸின் பந்துவீச்சில் ‘எக்ஸ்ட்ரா கவர்’ திசையில் ஹர்மன்ப்ரீத் ஒரு அற்புதமான பவுண்டரியை அடித்தார். இந்த ஓவரில் இந்தியா 8 ரன்களைச் சேர்த்தது.

     

  • 28 Jun 2026 08:00 PM (IST)

    பெரிய விக்கெட்டை இழந்த இந்தியா

    முதலில் ஸ்மிருதி மந்தனா 38 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

  • 28 Jun 2026 07:43 PM (IST)

    ஷெஃபாலி வெர்மா அவுட்!

    9.1 ஓவரில் சோபி மோலினியூக்ஸ் வீசிய பந்தில் ஷஃபாலி வர்மா போல்டாகி வெளியேறினார்.

  • 28 Jun 2026 07:32 PM (IST)

    பவர்பிளேயில் இந்தியா அபாரம்

    தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் விக்கெட் ஏதும் இழக்காமல் வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆறு ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது. மந்தனா (22) மற்றும் ஷஃபாலி (20) ஆகியோர் களத்தில் உள்ளனர்.

  • 28 Jun 2026 07:18 PM (IST)

    4 ஓவர்களுக்கு 29 ரன்கள்

    ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஜோடி இணைந்து முதல் 4 ஓவர்களில் 29 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடி வருகின்றனர்.

  • 28 Jun 2026 07:07 PM (IST)

    களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா

    இந்தியாவின் இன்னிங்ஸைத் தொடங்க ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் களமிறங்கியுள்ளனர். வலிமைமிக்க ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகப் பெரிய ஸ்கோரை எட்ட, இந்தப் ஜோடியிடமிருந்து வேகமான மற்றும் உறுதியான தொடக்கத்தை இந்தியா எதிர்பார்க்கிறது.

  • 28 Jun 2026 06:38 PM (IST)

    இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி டாஸ் விவரங்கள்

    மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

  • 28 Jun 2026 06:23 PM (IST)

    தோல்வியடைந்தால் என்ன நடக்கும்?

    தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் வங்கதேசம் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தாலும் இந்தியாவால் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

  • 28 Jun 2026 05:57 PM (IST)

    யாருக்கு சாதகம்?

     ஆஸ்திரேலியா ஆடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி ஆடிய 4 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்காவும் இந்தியாவைப் போலவே 4 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்றுள்ளது.

Published On - Jun 28,2026 5:50 PM

Follow Us