India Cricket Schedule 2026: 3 உலகக் கோப்பைகள்.. ஆசிய விளையாட்டு போட்டிகள்.. இந்திய ஆடவர், மகளிர் அணிகளின் அட்டவணை!
Indian Men’s and Women’s Cricket Team Schedule 2026: சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, 2026 டி20 உலகக் கோப்பை லீக் ஸ்டேஜ் போட்டிகளில் அமெரிக்கா, பாகிஸ்தான், நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணி
இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் 2026ம் ஆண்டிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்த காத்திருக்கின்றனர். 2025ம் ஆண்டில் இந்திய ஆடவர் அணி (Indian Cricket Team) சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2025 ஆசிய கோப்பையையும், இந்திய மகளிர் அணி 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதன்படி, 2026ம் ஆண்டிலும் இந்த வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள இந்திய கிரிக்கெட் அணி முயற்சிக்கும். இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி முதல் களமிறங்குகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, 2026 டி20 உலகக் கோப்பை லீக் ஸ்டேஜ் போட்டிகளில் அமெரிக்கா, பாகிஸ்தான், நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இதனை தொடர்ந்து, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வருகின்ற 2026ம் ஆண்டு ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையிலும் பங்கேற்கும். இந்த போட்டியில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இரண்டு தகுதிச் சுற்று அணிகளுடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி குரூப் A இல் இடம் பெற்றுள்ளது. இந்தநிலையில், 2026ம் ஆண்டில் இந்திய மகளிர் அணி மற்றும் இந்திய ஆடவர் அணி முழு அட்டவணை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: கில் விளையாடுவாரா? பும்ராவுக்கு ஓய்வா? நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிப்பு?
2026 ஆம் ஆண்டில் நடைபெறும் முக்கிய கிரிக்கெட் போட்டிகள்:
- WPL: 2026 ஜனவரி 9 – 2026 பிப்ரவரி 5 (நவி மும்பை மற்றும் வதோதரா)
- U19 ஆண்கள் உலகக் கோப்பை: 2026 ஜனவரி 15 – 2026 பிப்ரவரி 6 (ஜிம்பாப்வே மற்றும் நமீபியா)
- ஆண்கள் டி20 உலகக் கோப்பை: 2026 பிப்ரவரி 7 – 2026 மார்ச் 8 (இந்தியா மற்றும் இலங்கை)
- ஐபிஎல்: 2026 மார்ச் 26 – 2026 மே 31
- மகளிர் டி20 உலகக் கோப்பை: 2026 ஜூன் 12 – 2026 ஜூலை 5 (இங்கிலாந்து)
ஆண்கள் கிரிக்கெட் அணி காலண்டர் 2026
ஜனவரி 2026 – இந்தியாவில் நியூசிலாந்து (3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள்)
ஒருநாள் போட்டிகள்
- 2026 ஜனவரி 11: 1வது ஒருநாள் போட்டி — வதோதரா
- 2026 ஜனவரி 14: 2வது ஒருநாள் போட்டி — ராஜ்கோட்
- 2026 ஜனவரி 18: 3வது ஒருநாள் போட்டி — இந்தூர்
டி20
- 2026 ஜனவரி 21: 1வது டி20ஐ – நாக்பூர்
- 2026 ஜனவரி 23: 2வது டி20ஐ – ராய்ப்பூர்
- 2026 ஜனவரி 25: 3வது டி20ஐ – கவுகாத்தி
- 2026 ஜனவரி 28: 4வது டி20ஐ – விசாகப்பட்டினம்
- 2026 ஜனவரி 31: 5வது டி20ஐ – திருவனந்தபுரம்
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை
- 2026 பிப்ரவரி 7 – 2026 மார்ச் 8
- நடத்தும் நாடுகள்: இந்தியா & இலங்கை
இந்தியன் பிரீமியர் லீக்:
- 2026 மார்ச் 26 – 2026 மே 31
ஜூன் 2026 – ஆப்கானிஸ்தான் இந்திய சுற்றுப்பயணம்
- 1 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள்
ஜூலை 2026 – இந்திய இங்கிலாந்து சுற்றுப்பயணம்
டி20 போட்டிகள்
- 2026 ஜூலை 1: முதல் டி20ஐ – செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்
- 2026 ஜூலை 4: இரண்டாவது டி20ஐ – மான்செஸ்டர்
- 2026 ஜூலை 7: மூன்றாவது டி20ஐ – நாட்டிங்ஹாம்
- 2026 ஜூலை 9: நான்காவது டி20ஐ – பிரிஸ்டல்
- 2026 ஜூலை 11: ஐந்தாவது டி20ஐ – சவுத்தாம்ப்டன்
ஒருநாள் போட்டிகள்
- 2026 ஜூலை 14: முதல் ஒருநாள் போட்டி – பர்மிங்காம்
- 2026 ஜூலை 16: இரண்டாவது ஒருநாள் போட்டி – கார்டிஃப்
- 2026 ஜூலை 19: மூன்றாவது ஒருநாள் போட்டி – லார்ட்ஸ்
ஆகஸ்ட் 2026 – இலங்கைக்கான இந்திய சுற்றுப்பயணம்
- 2 டெஸ்ட்
செப்டம்பர் 2026 – இந்திய வங்கதேச சுற்றுப்பயணம்
- 3 ஒருநாள் போட்டிகள்
- 3 டி20 போட்டிகள்
செப்டம்பர்–அக்டோபர் 2026: இந்திய ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணம் (நடுநிலை இடம்)
- 3 டி20 போட்டிகள்
வெஸ்ட் இண்டீஸூக்கு இந்திய சுற்றுப்பயணம்
- 3 ஒருநாள் போட்டிகள்
- 5 டி20 போட்டிகள்
அக்டோபர்–நவம்பர் 2026: இந்தியா நியூசிலாந்து சுற்றுப்பயணம்
- 2 டெஸ்ட்
- 3 ஒருநாள் போட்டிகள்
- 5 டி20 போட்டிகள்
டிசம்பர் 2026 – இலங்கையின் இந்திய சுற்றுப்பயணம்
- 3 ஒருநாள் போட்டிகள்
- 3 டி20 போட்டிகள்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி காலண்டர் 2026
மகளிர் பிரீமியர் லீக்
- 2026 ஜனவரி 9 – 2026 பிப்ரவரி 5
இந்திய மகளிர் அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்
டி20 போட்டிகள்
- 2026 பிப்ரவரி 15: முதல் டி20ப – சிட்னி
- 2026 பிப்ரவரி 19: இரண்டாவது டி20ப – கான்பெர்ரா
- 2026 பிப்ரவரி 21: மூன்றாவது டி20ப – அடிலெய்டு
ஒருநாள் போட்டிகள்
- 2026 பிப்ரவரி 24: 1வது ODI (D/N) – பிரிஸ்பேன்
- 2026 பிப்ரவரி 27 : 2வது ODI (D/N) – ஹோபர்ட்
- 2026 மார்ச் 1 : 3வது ODI (D/N) – ஹோபர்ட்
ALSO READ: 2026ல் ரோஹித் – கோலி எத்தனை சர்வதேச போட்டிகளில் விளையாடுவார்கள்..? முழு விவரம் இங்கே!
டெஸ்ட் போட்டி
06 மார்ச் – 09 மார்ச் 2026: ஒரே டெஸ்ட் (D/N) – பெர்த்
இந்திய மகளிர் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம்
- 2026 மே 28: முதல் டி20ஐ – செல்ம்ஸ்ஃபோர்டு
- 2026 மே 30: இரண்டாவது டி20ஐ – பிரிஸ்டல்
- 2026 ஜூன் 02: மூன்றாவது டி20ஐ – டவுன்டன்
2026 மகளிர் டி20 உலகக் கோப்பை
குரூப் ஸ்டேஜ்
- 2026 ஜூன் 14: பாகிஸ்தான் vs இந்தியா – பர்மிங்காம்
- 2026 ஜூன் 17: அணி இன்னும் உறுதியாகவில்லை vs இந்தியா – லீட்ஸ்
- 2026 ஜூன் 21: தென்னாப்பிரிக்கா vs இந்தியா – மான்செஸ்டர்
- 2026 ஜூன் 25: அணி இன்னும் உறுதியாகவில்லை vs இந்தியா – மான்செஸ்டர்
- 2026 ஜூன் 28: ஆஸ்திரேலியா vs இந்தியா – லார்ட்ஸ்
இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட்
- 10 ஜூலை 2026 – 13 ஜூலை 2026: ஒரே டெஸ்ட் – லார்ட்ஸ்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026
- 2026 செப்டம்பர் 19 – 2026 அக்டோபர் 4: ஜப்பான்