IND vs WI 2nd Test Day 4 Highlights: வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் வீண்! வெற்றி விளிம்பில் இந்திய அணி.. கலக்கிய பும்ரா!
IND vs WI 2nd Test Score: நான்காம் நாளான இன்று அதாவது 2025 அக்டோபர் 13ம் தேதி ஆட்டம் முடியும் வரை கே.எல். ராகுல் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் வெற்றிபெற இந்திய அணிக்கு இன்னும் 58 ரன்களே தேவையாக உள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு (IND vs WI) இடையிலான 4வது நாள் முடிவில், இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருந்தது. அதன்படி, இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற இன்னும் 58 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. நான்காம் நாளான இன்று அதாவது 2025 அக்டோபர் 13ம் தேதி ஆட்டம் முடியும் வரை கே.எல். ராகுல் (KL Rahul) மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். முன்னதாக, பாலோ ஆன் ஆகி 2வது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 390 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதே நேரத்தில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முன்னிலையின் அடிப்படையில் 121 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ்:
நான்காவது நாள் தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 170/2 என்ற ஸ்கோருடன் தொடங்கியது. ஷாய் ஹோப் மற்றும் ஜான் கேம்பல் ஏற்கனவே 3வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்திருந்தனர். நான்காவது நாளில், இருவரும் தங்கள் நிலையான இன்னிங்ஸைத் தொடர்ந்த நிலையில், ஷாய் ஹோப் தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தை அடித்தார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாய் ஹோப்பின் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.




ALSO READ: அரையிறுதி வாய்ப்பு இந்திய அணிக்கு தவறியதா..? சமன்பாடு என்ன சொல்கிறது..?
மறுபுறம், ஜான் கேம்பல் 115 ரன்கள் எடுக்க கேம்பல் மற்றும் ஹோப் 177 ரன்கள் கூட்டணி அமைத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை கௌரவ ரன் குவிப்புக்கு அழைத்து சென்றனர். ஷாய் ஹோப் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது, மேற்கிந்திய தீவுகள் அணி 271 ரன்களில் 4வது விக்கெட்டை இழந்திருந்தது. அடுத்த 40 ரன்களுக்குள் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த 5 விக்கெட்டுகளை இழந்ததால், ஒரு சரிவு ஏற்பட்டது.
ஜேடன் சீல்ஸ் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் 10வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்து அணியை 390 ரன்களுக்கு அழைத்துச் சென்றனர். நான்காவது நாளில் ஜஸ்பிரித் பும்ரா வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார், கடைசி மூன்று வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்தார்.
ALSO READ: ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைக்க தயார்.. தீவிர பயிற்சியில் ரோஹித் சர்மா!
இந்திய அணிக்கு 121 ரன்கள் இலக்கு:
Exquisite timing 👌
KL Rahul 🤝 Sai Sudharsan
The duo compiled valuable 5️⃣4️⃣* runs for the 2️⃣nd wicket 👏
Scorecard ▶ https://t.co/GYLslRyLf8#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank | @klrahul | @sais_1509 pic.twitter.com/AMlCfLt9n7
— BCCI (@BCCI) October 13, 2025
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் எதிராக ஃபாலோ-ஆன் விதித்து 121 ரன்கள் இலக்காக பெற்று கொண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் வேகமாக விளையாட முயன்றபோது வெறும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நான்காவது நாளில், இந்தியா ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. அதேநேரத்தில், கே.எல். ராகுல் 25 ரன்களுடனும், சாய் சுதர்சன் தற்போது 30 ரன்களுடன் பேட்டிங் செய்து வருகின்றனர். 5வது நாளில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 58 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.