IND vs SA ODI: 2462 நாட்களுக்கு பிறகு.. இந்திய அணிக்கு வெற்றியை தராத கோலியின் சதம்.. ரசிகர்கள் ஏமாற்றம்!

Virat Kohli Century: கோலியின் 53 ஒருநாள் சதங்களில், 8 சதங்கள் அடித்த போட்டிகள் மட்டுமே இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தன. அதாவது கோலி சதம் அடிக்கும் நேரத்தில் 85% இந்திய அணி வெற்றியை பெற்றுள்ளது. இதனால்தான் கோலியை சேஸ் மாஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறார்.

IND vs SA ODI: 2462 நாட்களுக்கு பிறகு.. இந்திய அணிக்கு வெற்றியை தராத கோலியின் சதம்.. ரசிகர்கள் ஏமாற்றம்!

இந்திய கிரிக்கெட் அணி

Published: 

04 Dec 2025 14:51 PM

 IST

ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தியா – தென்னாப்பிரிக்கா (India – South Africa) இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி எதிர்பாராதவிதமாக தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 358 ரன்கள் எடுத்த போதிலும், தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை சந்தித்தது. இது இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சதம் அடித்த விராட் கோலிக்கும் (Virat Kohli) மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. கடந்த 2462 நாட்களில் அல்லது கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கோலி சதம் அடித்த போட்டிகளில், இந்திய அணி வெற்றி பெறத் தவறியது இதுவே முதல் முறையாகும்.

விராட் – கெய்க்வாட் சதம்:

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது ஒருநாள் போட்டியில், விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பாக விளையாடி சதத்தை பதிவு செய்தனர். இதன் காரணமாக, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 93 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது 53வது சதத்தையும், சர்வதேச கிரிக்கெட்டில் 84வது சதத்தை பதிவு செய்தார். அதேபோல், ருதுராஜ் கெய்க்வாட் 105 ரன்கள் எடுத்து, தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இந்த பங்களிப்பு அனைத்து ஏமாற்றத்தையே கொடுத்தது.

ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பைக்கு புது ப்ளான்.. இந்திய அணிக்கு நியூ ஜெர்சி அறிமுகம்!

2462 நாட்களுக்குப் பிறகு..

விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில், அவர் ஒரு சதம் அடிக்கும் போதெல்லாம், இந்திய  அணியின் வெற்றி கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது.  விராட் கோலியின் கடைசி 18 சர்வதேச சதங்களில், 17 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது.ராய்ப்பூர் போட்டி இந்த சாதனையை முறியடித்தது. 2,462 நாட்களில் கோலி ஒரு சதம் அடித்தும், இந்தியா வெற்றி பெறத் தவறியது இதுவே முதல் முறை. முன்னதாக, 2019ம் ஆண்டில், ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 123 ரன்கள் எடுத்த போதிலும் இந்தியா தோல்வியடைந்தது.

கோலியின் 53 ஒருநாள் சதங்களில், 8 சதங்கள் அடித்த போட்டிகள் மட்டுமே இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தன. அதாவது கோலி சதம் அடிக்கும் நேரத்தில் 85% இந்திய அணி வெற்றியை பெற்றுள்ளது. இதனால்தான் கோலியை சேஸ் மாஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சேஸிங் செய்யும் போது 6072 ரன்கள் எடுத்துள்ளார்.

தோல்விக்கான காரணம் என்ன?

ராய்ப்பூர் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மோசமானதாகவே இருந்தது. 359 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை எட்டியது. இந்தியாவுக்கு எதிரான இந்த இவ்வளவு பெரிய இலக்கை துரத்திய 2வது அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா அணி படைத்தது. முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு 359 என்ற இமாலய இலக்கை இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி துரத்தியது.

ALSO READ: இந்தியாவிற்கு எதிராக 359 ரன்கள் இலக்கு.. கெத்தாக துரத்தி வெற்றி கண்ட தென்னாப்பிரிக்கா!

சமநிலையில் இந்திய அணி:

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும்  1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டியானது வருகின்ற 2025 டிசம்பர் 6ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும்.

Related Stories
T20 World Cup 2026: ஆதிக்கம் செலுத்தும் சிறிய நாடுகள்.. பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து.. லேட்டஸ்ட் புள்ளிகள் அட்டவணை அப்டேட்!
India vs Pakistan 2026: மழையால் தடையா..? இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளில் மோசமான வானிலை.. வெதர் அப்டேட் இதோ!
IPL 2026: ஜடேஜா இல்லை! ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இளம் வீரர் நியமனம்!
India vs Pakistan 2026: பறக்கப்போகும் பந்து.. தெறிக்கப்போகும் ஸ்டிக்.. நெருங்கும் IND vs PAK போட்டி.. ஆட்டத்தை எங்கு காண்பது?
India vs Pakistan: நெருப்பாக வரும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. மிரட்டப்போக்கும் 8 முக்கிய வீரர்கள்!
T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பையில் முதல் அப்செட்! வீழ்ந்த ஆஸ்திரேலியா.. அதிர்ச்சியளித்த ஜிம்பாப்வே..!
பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்திய அமெரிக்கா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல்
‘கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு ரூ.2.52 கோடி அபராதம்.. செலுத்தாவிட்டால் 6 மாதம் சிறை.. உயர்நீதிமன்றம்
சத்தமில்லாமல் இந்திய - அமெரிக்க வரத்தக ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்த அமெரிக்கா
மலையாள சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ‘ரோஸ்லின்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..