IND vs SA 1st Test: இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி எப்போது? இலவச​​மாக எங்கு பார்க்கலாம்..?

IND vs SA 1st Test Live Streaming: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 2025 நவம்பர் 14ம் தேதியான நாளை தொடங்கி வருகின்ற 2025 நவம்பர் 18ம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்கும்.

IND vs SA 1st Test: இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி எப்போது? இலவச​​மாக எங்கு பார்க்கலாம்..?

சுப்மன் கில் - டெம்பா பவுமா

Published: 

13 Nov 2025 16:07 PM

 IST

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான (India vs South Africa Test Series) 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை அதாவது 2025 நவம்பர் 14ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக, 9 மணிக்கு இந்த போட்டிக்கான டாஸ் நடைபெறும். 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியில் இந்திய மண்ணில் இந்திய அணி (Indian Cricket Team) விளையாடும் 2வது டெஸ்ட் தொடர் என்பதால் ரசிகர்கள் இந்தப் போட்டியை காண மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை எங்கே, எப்போது காணலாம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: முதல் டெஸ்டில் இருந்து ஆல்ரவுண்டர் நீக்கம்.. பிசிசிஐ முக்கிய அறிவிப்பு! காரணம் என்ன?

போட்டிக்கான தேதி மற்றும் நேரம்:


இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 2025 நவம்பர் 14ம் தேதியான நாளை தொடங்கி வருகின்ற 2025 நவம்பர் 18ம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்கும். இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. கடைசியாக ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

நேரடி ஒளிபரப்பை நீங்கள் எங்கே பார்க்கலாம்?

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரடியாக ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. அதன்படி, தமிழில் லைவ் காண விரும்புவோர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில் காணலாம். இதுமட்டுமின்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம் என பல மொழிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.

லேப்டாப் மற்றும் மொபைலில் காண்பது எப்படி..?

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை டிவியில் காண முடியாவிட்டால், போட்டியின் நேரடி ஒளிபரப்பை ஜியோ ஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதள பக்கத்தில் காணலாம். எந்தவொரு கட்டணமும் இன்றி முழுமையாக கண்டு ரசிக்கலாம்.

ALSO READ: கடினமாக காட்சியளித்த பிட்ச்.. ஈடன் கார்டனில் கில் அதிருப்தி.. நேரில் ஆய்வு செய்த கங்குலி..!

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

இந்திய லெவன்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

தென்னாப்பிரிக்கா லெவன்:

டெம்பா பவுமா (கேப்டன்), ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன் (விக்கெட் கீப்பர் ), டெவால்ட் ப்ரீவிஸ், ஜுபைர் ஹம்சா, டோனி டி ஸோர்ஸி, கார்பின் போஷ், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், செனுரன் முத்துசாமி, ககிசோ ரபடா, சைமன் ஹர்மர்