IND vs PAK Asia Cup 2025: சூர்யாவின் சூரசம்ஹாரம்.. பாகிஸ்தானுக்கு எதிராக பக்கா பிளான்.. கெத்தாக வென்ற இந்தியா!
India vs Pakistan: 2025 ஆசியக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலக்கை துரத்திய இந்திய அணி 15.5 ஓவர்களில் வெற்றியை பெற்றது.

பல எதிர்ப்புக்கு மத்தியில் 2025 ஆசிய கோப்பையில் (2025 Asia Cup) இன்று அதாவது 2025 செப்டம்பர் 14ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலக்கை துரத்திய இந்திய அணி (Indian Cricket Team) 15.5 ஓவர்களில் வெற்றியை பெற்றது. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தபோது 64 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நேரத்தில், பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி 16 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்து ஒட்டுமொத்த பாகிஸ்தானின் மரியாதையையும் காப்பாற்றினார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளுக்கு 127 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 28 ரன்களும், ஹர்திக் பாண்டியா 3 ஓவர்களில் 34 ரன்களும் கொடுத்தனர். அதேநேரத்தில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் 13 ஓவர்களில் 65 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். இந்திய அணியின் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அக்ஷர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.




ALSO READ: டாஸூக்கு முன்பு கைலுக்க மறுத்த இந்திய கேப்டன்.. இந்திய அணிக்கு 128 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு 128 ரன்கள் இலக்கு:
2⃣ wins on the bounce for #TeamIndia! 🙌
A dominating show with bat & ball from Surya Kumar Yadav & Co. to bag 2 more points! 👏 💪
Scorecard ▶️ https://t.co/W2OEWMTVaY#AsiaCup2025 pic.twitter.com/hM7iin7AAq
— BCCI (@BCCI) September 14, 2025
128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். அபிஷேக் சர்மா முதல் பந்திலிருந்தே பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்ய தொடங்கினார். ஷாஹீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். இதனால் இந்திய அணி முதல் ஓவரிலேயே விக்கெட் எதுவும் இல்லாமல் 12 ரன்கள் எடுத்தது.
சாம் அயூப் வீசிய 2வது ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரிகள் அடித்த சுப்மன் கில் 7 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆனார். இதனால், இந்திய அணி 22 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மாவும் 13 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 31 ரன்களில் அவுட்டானார். இதன்பிறகு இணைந்த திலக் வர்மா – சூர்யகுமார் யாதவ் கூட்டணி இந்திய அணியை படிப்படியாக வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. 4வது ஓவரில் இந்திய அணி 2வது விக்கெட்டை இழந்தாலும், இந்த கூட்டணி 13வது ஓவர் வரை நகர்ந்தது. இந்தநிலையில்தான் சாம் அயூப் வீசிய 13வது ஓவரில் 31 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த திலக் வர்மா க்ளீன் போல்டானார். மறுமுனையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுண்டரிகளை விரட்ட தொடங்க, இந்திய அணி 14வது ஓவரில் 100 ரன்களை கடந்தது.
ALSO READ: 24 வயதில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டம்.. தங்கத்தை தூக்கிய இந்திய வீராங்கனை மினாக்ஷி ஹூடா!
தொடர்ந்து உள்ளே வந்த சிவம் துபே தன் பங்கிற்கு ஒரு சிக்ஸரை பறக்கவிட, மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்து ரன்களை விரட்டி இந்திய அணிக்கு 15.5 ஓவர்களில் வெற்றியை தேடி கொடுத்தார். இந்திய அணி சார்பில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 47 ரன்களுடனும், சிவம் துபே 7 பந்துகளில் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.