IND vs PAK Asia Cup 2025: டாஸூக்கு முன்பு கைலுக்க மறுத்த இந்திய கேப்டன்.. இந்திய அணிக்கு 128 ரன்கள் இலக்கு!
Suryakumar Yadav No Handshake With Salman: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்பு இரு அணிகளின் கேப்டன்களும் நடந்து கொண்ட விதம் விவாத பொருளாக மாறியுள்ளது. அதாவது. ஒரு அணிகளை சேர்ந்த கேப்டன்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கவோ அல்லது பார்த்துக்கொள்ளவோ இல்லை.

2025 ஆசியக் கோப்பையில் (2025 Asia Cup) இன்று அதாவது 2025 செப்டம்பர் 14ம் தேதி இந்தியாவும், பாகிஸ்தானும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் விளையாடி வருகிறது. ஆசியக் கோப்பையின் குரூப் ஏ பிரிவில் இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) அணிகளுக்கு இடையிலான போட்டியின் டாஸின்போது முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா பேட்டிங்கை தேர்வு செய்தார். மறுபுறம், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav), தானும் முதலில் பந்து வீச விரும்பியதால், இந்த முடிவுக்கு தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார். இந்தநிலையில், போட்டிக்கு முன்பு இரு அணிகளின் கேப்டன்களும் நடந்து கொண்ட விதம் விவாத பொருளாக மாறியுள்ளது. அதாவது. ஒரு அணிகளை சேர்ந்த கேப்டன்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கவோ அல்லது பார்த்துக்கொள்ளவோ இல்லை.
ALSO READ: பிசிசிஐ தலைவராக சச்சின் டெண்டுல்கர்..? முக்கிய பதவிகளுக்கான தேர்தல் எப்போது?




டாஸின்போது கேப்டன்கள் செய்த செயல்:
Team India’s captain Suryakumar Yadav refused the customary handshake with Pakistan captain Salman Ali Agha.#AsiaCup2025 #INDvsPAK #SuryakumarYadav #InsideSport #CricketTwitter pic.twitter.com/kQ6yoBgkND
— InsideSport (@InsideSportIND) September 14, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றால் எப்போதும் அதிகளவிலாக எதிர்பார்ப்பும், உற்சாகமும் இருக்கும். ஆனால், 2025 ஆசிய கோப்பையில் இரு அணிகளுக்கும் இடையிலான அட்டவணை அறிவிக்கப்பட்டது முதலே, பதட்டமும் எதிர்ப்பும் கிளம்பியது. டாஸின் போது சூர்யகுமார் யாதவும் சல்மான் அலி ஆகாவும் தள்ளி தள்ளி நின்று கொண்டனர். அதேபோல், டாஸுக்குப் பிறகு கேப்டன்கள் கைகுலுக்கிக் கொள்வது ஒரு பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த முக்கிய போட்டியின் டாஸின்போது, அது நடக்கவில்லை. அதற்குகாரணம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதட்டமே காரணமாகும்.
டாஸூக்கு பிறகு சூர்யகுமார் யாதவ் சொன்னது என்ன..?
டாஸ் இழந்த சூர்யகுமார் யாதவ் பேசுகையில், “நாங்கள் எங்கள் கடைசி போட்டியை ஒரு பிட்ச் தொலைவில் விளையாடினோம், அப்போது விக்கெட் நன்றாக இருந்தது. இரவில் பேட்டிங் செய்வது எளிது, பனியும் ஒரு விளைவை ஏற்படுத்தும். நாங்கள் விரும்பியதைப் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், இந்திய அணிக்கு 128 ரன்கள் இலக்காக வழங்கப்பட்டுள்ளது.
ALSO READ: இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் யார்..? பிசிசிஐ கொடுத்த சூப்பர் அப்டேட்!
பாகிஸ்தான் எதிரான இந்திய அணி விவரம்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் அணி விவரம்:
சல்மான் ஆகா (கேப்டன்), சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், ஷஹீன் அப்ரிடி, சுஃபியான் முகீம், அப்ரார் அகமது.