India vs Pakistan: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா.. ரசிகர்களை மகிழ வைக்கும் போட்டியை எங்கே, எப்படி நேரலையில் பார்ப்பது?
India vs Pakistan 2025 Asia Cup Match: 2025 ஆசியக் கோப்பை இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14, 2025 அன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனி LIV இல் நேரலை ஒளிபரப்பப்படுகிறது. இந்தியா 10 முறையும், பாகிஸ்தான் 6 முறையும் வென்றுள்ளன.

2025 ஆசியக் கோப்பையில் (2025 Asia Cup) இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையிலான போட்டி எப்போது நடைபெறும் என ஆவலுடன் காத்திருக்கின்றன. இந்த போட்டியானது நாளை அதாவது 2025 செப்டம்பர் 14ம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியில் விராட் கோலி , ரோஹித் சர்மா (Rohit Sharma), பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் போன்ற ஜாம்பவான்கள் இல்லாமல் முதல் முறையாக விளையாடப்பட இருக்கிறது. இதனால், இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் எப்படி செயல்படுவார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
எங்கே, எப்படி நேரலையில் பார்ப்பது?
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட இருக்கிறது. அதேநேரத்தில், சோனி LIV ஆப்பை பயன்படுத்தி மொபைல் மற்றும் மடிக்கணினியில் போட்டியை காணலாம்.
ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் அதிர்ச்சி.. முழுமையாக விற்காத டிக்கெட்.. அதிருப்தியில் ரசிகர்களா?




இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் ஒருநாள் மற்றும் டி20 என நேருக்குநேர் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், பாகிஸ்தான் அணி 6 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள நிலையில், இந்திய அணி அதிகபட்சமாக 10 போட்டிகளில் வென்றுள்ளது. அதே நேரத்தில், மூன்று போட்டிகள் மழையால் மழையால் ரத்து செய்யப்பட்டன. பாகிஸ்தான் கடைசியாக 2022 ஆம் ஆண்டு துபாயில் இந்தியாவை தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கணிக்கப்பட்ட இந்திய அணி விவரம்:
அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ்.
இந்திய அணியின் முழு விவரம்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜிதேஷ் சர்மா.
ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் மோதல்: வெல்லப்போவது யார் ?
கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி விவரம்:
சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஃபகார் ஜமான், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), சல்மான் அகா (கேப்டன்), ஹசன் நவாஸ், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது, சுஃபியன் முகீம்.
பாகிஸ்தான் அணியின் முழு விவரம்:
சல்மான் ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வாசிம், சாஹிப் வாசிம், ஹகீன் ஷா அப்ரிடி.