Virat Kohli Records: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. 7 முக்கிய சாதனைகளை குவித்த விராட் கோலி!

IND vs NZ ODI Series: 2027 ஒருநாள் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. இந்திய அணி தோல்வியை சந்திருந்தாலும் விராட் கோலி 80 என்ற சராசரியில் 240 ரன்கள் எடுத்து ஒரு பல சாதனைகளை படைத்தார்.

Virat Kohli Records: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. 7 முக்கிய சாதனைகளை குவித்த விராட் கோலி!

விராட் கோலி

Published: 

19 Jan 2026 20:01 PM

 IST

இந்தியா – நியூசிலாந்து (Ind vs Nz) இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 க்கு என்ற கணக்கில் வென்றது. இந்தூரில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 2027 ஒருநாள் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. இந்திய அணி தோல்வியை சந்திருந்தாலும் விராட் கோலி 80 என்ற சராசரியில் 240 ரன்கள் எடுத்து ஒரு பல சாதனைகளை படைத்தார். அதன்படி, இந்தத் தொடரில் விராட் கோலி (Virat Kohli) படைத்த 7 சாதனைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

விராட் கோலி படைத்த 7 பெரிய சாதனைகள்:

அதிவேகமாக 28,000 ரன்களை குவித்தவர்:

விராட் கோலி 624 இன்னிங்ஸ்களில் சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களை எட்டினார். இது சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமானதாகும். இந்த சாதனையை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 644 இன்னிங்ஸ்களிலும், குமார் சங்கக்காரா 666 இன்னிங்ஸ்களிலும் 28,000 ரன்களையும் குவித்திருந்தனர்.

ALSO READ: விராட் கோலியின் போராட்டம் வீண் – 41 ரன்களில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம் – தொடரையும் வென்றது!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்:

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் விராட் கோலி இப்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதாவது விராட் கோலி 626 இன்னிங்ஸ்களில் 28,215 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ​​விராட் கோலி, குமார் சங்கக்காராவை (28,016) முந்தினார். சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிராக அதிக ஒருநாள் சதங்கள்:

விராட் கோலி நியூசிலாந்திற்கு எதிராக 7 சதங்களை அடித்துள்ளார். இது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு வீரர் அடித்த அதிக ஒருநாள் சதங்கள் ஆகும். ரிக்கி பாண்டிங் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோரின் தலா 6 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளனர்.

35 ஸ்டேடியங்களில் ஒருநாள் சதங்கள்:

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 35 வெவ்வேறு ஸ்டேடியங்களில் சதங்கள் அடித்துள்ளார். இந்த வகையில், 34 வெவ்வேறு ஸ்டேடியங்களில் சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்:

மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்து அதிக ஒருநாள் போட்டிகளில் ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் 299 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 12,676 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடத்தில் களமிறங்கி 12,662 ரன்கள் எடுத்துள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிராக அனைத்து வடிவங்களிலும் அதிக சதங்கள்:

விராட் கோலி நியூசிலாந்திற்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, அனைத்து வடிவங்களிலும் சேர்த்து அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் ஆனார். நியூசிலாந்திற்கு எதிராக மூன்று வடிவங்களிலும் கோலி 10 சதங்களை அடித்துள்ளார்.

ALSO READ: இந்திய ஜெர்சியில் விராட் – ரோஹித் அடுத்து எப்போது களமிறங்குவார்கள்..? யாருடன் மோதும் இந்திய அணி?

தொடர்ச்சியாக அதிக 50+ ஸ்கோர்கள்:

விராட் கோலி 5 அல்லது அதற்கு மேற்பட்ட இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக அதிக 50+ ஸ்கோர்கள் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் . முதல் ஒருநாள் போட்டியில் கோலி எடுத்த 93 ரன்கள் அவரது தொடர்ச்சியான 5வது ஒருநாள் போட்டியாகும்.

Related Stories
Rohit and Virat: இந்திய ஜெர்சியில் விராட் – ரோஹித் அடுத்து எப்போது களமிறங்குவார்கள்..? யாருடன் மோதும் இந்திய அணி?
IND vs NZ T20 Series: ஒருநாள் தொடர் தோல்வி! இந்தியா – நியூசிலாந்து இடையிலான டி20 தொடர் எப்போது? முழு விவரம் இதோ!
விராட் கோலியின் போராட்டம் வீண் – 41 ரன்களில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம் – தொடரையும் வென்றது!
IND U19 vs BAN U19: மழையால் இந்திய அணிக்கு அடித்த லக்.. வங்கதேசத்தை வீழ்த்தி 2வது வெற்றி!
Shubman Gill: இந்தூரில் தண்ணீர் குடிக்க பயமா? நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை கையோடு கொண்டு வந்த கில்.. ஏன் தெரியுமா?
Vaibhav Suryavanshi: கோலி சாதனை முறியடிப்பு! வங்கதேசத்திற்கு எதிராக சம்பவம் செய்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி!
ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..