IND W vs NZ W: நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தல்.. உலகக் கோப்பையில் அரையிறுதியை உறுதி செய்த இந்திய மகளிர் அணி!

India Women vs New Zealand Women: இந்திய மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் இடையிலான 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதன்மூலம், இந்திய மகளிர் அணி 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதியை உறுதி செய்தது. 

IND W vs NZ W: நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தல்.. உலகக் கோப்பையில் அரையிறுதியை உறுதி செய்த இந்திய மகளிர் அணி!

இந்திய மகளிர் அணி

Updated On: 

23 Oct 2025 23:55 PM

 IST

இந்திய மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் (IND W vs NZ W) இடையிலான 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் (Harmanpreet Kaur) தலைமையிலான இந்திய மகளிர் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதன்மூலம், இந்திய மகளிர் அணி 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதியை உறுதி செய்தது. இன்று அதாவது 2025 அக்டோபர் 23ம் தேதி DY பாட்டீல் ஸ்டேடியத்தில் இந்திய மகளிர் அணியும், நியூசிலாந்து மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில், இந்திய அணி DLS விதிகளின் கீழ் நியூசிலாந்தை 53 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர்.

ALSO READ: பாகிஸ்தான் ஜிந்தாபாத்.. சுப்மன் கில்லை அலறவிட்ட ரசிகர்!

பிரதிகா 134 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 122 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 95 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 109 ரன்கள் எடுத்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 201 பந்துகளில் 212 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இது இந்திய அணி 49 ஓவர்களில் 340 ரன்கள் குவிக்க மிகப்பெரிய காரணமாக அமைந்தது.

அரையிறுதியில் இந்திய மகளிர் அணி:

போட்டியில் குறுக்கிட்ட மழை:

மழையும் ஆட்டத்தில் குறுக்கிட்டதால், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 49 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணிக்கு DLS விதிகளின் கீழ் 44 ஓவர்களில் 325 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணி 44 ஓவர்களில் 271/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ALSO READ: அடிலெய்டிலும் இந்திய அணி தோல்வி.. கேப்டனாக தனது முதல் தொடரை இழந்த கில்!

நியூசிலாந்து அணிக்காக அதிகபட்சமாக ப்ரூக் ஹாலிடே 84 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 81 ரன்கள் எடுத்தார். மேலும், இசபெல்லா கேஜும் 51 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இருப்பினும், எந்த பேட்ஸ்மேனாலும் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இந்தியா சார்பாக ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் கிராந்தி கவுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினர்.